நேபாளத்தின் காட்டுப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில், அந்த நாட்டின் துணைப் பிரதமர் மகளுடன் சண்டை போட்டதாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இளவரசர் பரஸ் ஷா, முன்னாள் மன்னர் ஞானேந்திராவின் மகன் ஆவார். இவரது குடிப்பழக்கம் மற்றும் பெண்களுடனான ஆடம்பர வாழ்க்கை என்று இருந்த காரணங்களால் தனது சொந்த நாட்டில்கூட பிரபலமடையவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் மன்னர்
அரண்மனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவங்கள் அனைத்திலும் இவரது பெயரை கெடுத்தன. கடந்த 2008ல் நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தபின், பரஸ், சிங்கப்பூருக்குச் சென்று, சில மாதங்களுக்கு முன்தான் இவர் நாடு திரும்பியிருந்தார். 13ம் தேதி நேபாளத்தின் தென்பகுதியில் சித்வான் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு
இவர் சென்றபோது அங்கு வந்திருந்த நேபாளத் துணைப் பிரதமர் சுஜாதா கொய்ராலாவின் மகளுடனுடம், மருமகனுடனும் பரஸ் சண்டையிட்டு வாக்குவாதம் முற்றவே, குடிபோதையில் இருந்த பரஸ், வானத்தை நோக்கி ஐந்து முறை சுட்டார். இச்சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை உருவாக்கிய தோடு, கொய்ராலாவின் மகள் இதுகுறித்து போலீசில் புகார் செய்ததன் அடிப்படையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பரஸ், தான் வானத்தை நோக்கிச் சுட்டதை ஒப்புக் கொண்டதை அடுத்து எதிர்க்கட்சிகள், பரசை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் விளைவாக பரஸ் ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.