கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பார்ப்பவர்கள், மனதை சற்றே திடப்படுத்திக்கொண்டு பாருங்கள்,இந்த காட்சியை கர்பிணிகளோ அல்லது இருதய நோய் உள்ளவர்களோ பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனை வார்டில் பேய் நுழைவது போன்ற படக் காட்டி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. மருத்துவ மனை வார்டில் மர்ம உருவம் ஒன்று நுழைவது போன்று படக்காட்சி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது.
வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் கைபேசி மூலமாக அனுப்பினர்.
சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரிக்கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து, அறையை விட்டு வெளியேறுகிறது.
உண்மையில் அந்த மர்ம உருவம் பேயா? அல்லது விஷமிகள் செய்த வேலையா? என்று விசாரித்து வருகின்றனர்.