Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராசாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு; நிருபர்- அதிகாரி வீட்டில் புகுந்தது சி.பி.ஐ.,

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக  முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் வீடு மற்றும் நிருபர்‌கள், அதிகாரிகள் என பல முக்கியப்புள்ளிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். கார்ப்பரேட் தரகர் நிரா ராடியாவின் டில்லி வீட்டிலும் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு மேற் கொண்டுள்ளது. டில்லி பாரகம்பா சாலையில் இருக்கும் நிராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் அலுவலகம், டில்லி சத்தர்பூர் பகுதியில் இருக்கும் அவரது வீடு உள்ளிட்ட டில்லியில் மொத்தம் 7 இடங்களில் ரெய்டு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. டில்லியில் இருந்து வந்‌த சி.பி.ஐ., அதிகாரிகள் 150 பேர் கொண்‌ட குழு பிரிந்து ரெய்டு நடந்து வருகிறது. வாரப்பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் , நுங்கம்பாக்கம் , காதர்நவாஸ்கான் ரோட்டில் இருக்கும் டிராய் மாஜி இயக்குநர் வீட்டிலும் ரெய்டு நடை‌பெறுகிறது. அதே சாலையில் இருக்கும் நிரா ராடியாவின் வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குவிந்துள்ளனர். ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாஷா. இவர் கிரீன் ஹவுஸ் புரோமட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் ரெய்டு நடந்தது. இன்று அந்நிறுவனத்தின் பங்குதாரரான சுப்புடு என்ற சுப்பரமணியன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. சுப்புடுவும் ராஜாவுக்கு நண்பர்தான். ராஜாவின் பெரம்பலூர் வீட்டிலும் மீண்டும் ரெய்டு நடக்கிறது.

ராசாத்தி ஆடிட்டர் வீட்டில் ரெய்டு: தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியும், ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் தாயாருமான ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினம் வீட்டில் சிபிஐ, அதிகாரிகள் ரெய்டு மேற் கொண்டுள்ளனர்.

சி.பி.ஐ., பார்வையில் பாதிரியார்: மயிலாப்பூரில் இருக்கும் ‌பாதிரியார் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. தமிழ்மையம் என்ற என்.ஜி.ஓ., வின் இயக்குநர். இவர் ராஜாவுக்கு மட்டுமல்ல தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனி மொழிக்கும் ‌நெருக்கமானவர். சங்கமம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், சென்னை மாரத்தான் என்ற நிகழ்ச்சியையும் ஒருங்கிணைப்பதில் இவர் உதவியாக இருந்திருக்கிறார்.

அண்மையில் மாஜி அமைச்சர் ராஜாவின் ரெபம்பலூர் வீடு, அவரது சகோதரர் களியபெருமாள், நண்பர் சாதிக்பாஷா ஆகியோரது வீடுகள் என 14 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியிலும் ரெய்டு : திருச்சி திருவாணைக்காவல் பெரியார் நகரில் இருக்கிறது மாஜி அமைச்சர் ராஜாவின் சகோதரி விஜயாம்பாளின் வீடு. அவரது வீட்டுக்கு இன்று காலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதே போல் சிவரமான் நகரில் இருக்கும் ராஜாவின் சகோதரர் ராமசந்திரன் வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவ நிலை மாற்றம் தொடர்பான துறை இயக்குநராக இருக்கிறார்.

ஊட்டியில் பரபரப்பு: சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து , ஊட்டி நீலகிரியில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவின் அலுவலகத்தை சுற்றி பரபரப்பான சூழல் நிலவுகிறது.

டிராய் அதிகாரி வீட்டிலும்: டிராய் ( தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ) மாஜி தலைவர் பிரதிப் பாய்ஜால் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. பிரதீப் பாய்ஜால் 2004 -2008 கால கட்டத்தில் டிராய் தலைவராக இருந்தார். அவர் கடந்த 2009ல் நிராவின் அலுவலகத்தில் சேர்ந்தார்.

நிராவின் பூதாகர வளர்ச்சி ? என்.ஆர்.ஐ.., யான நிரா 9 ஆண்டுகளில் பூதாகர வளர்ச்சி அடைந்துள்ளார். 300 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய பிசினஸ் நிறுவனம் அமைத்தது எப்படி என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. நிரா வெளிநாட்டு நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உளவு வேலை பார்த்தாரா என்ற சலசலப்பும் நிலவி வருகிறது.

சி.பி.ஐ., பிடியில் ஹவாலா ஏஜன்ட்: கடந்த 8ம் தேதியன்று ராஜாவின் வீட்டில் நடந்த ரெய்டின் ‌போது அவரது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் பண பட்டுவாடா குறித்து முக்கிய தகவல்கள் இருந்தததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய ரெய்டில் சி.பி.ஐ., வளையத்துக்குள் வந்திருக்கிறார் ஹவாலா ஏஜன்ட் ஒருவர். மகேஸ் ஜெயின் என்ற அந்த ஹவாலா ஏஜன்ட் பெயர் ராஜா டைரியில் இருந்ததாக கூறப்படுகிறது.

சோதனை மட்டும் போதாது: 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ., அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்தக்கது என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய ‌சாமி தெரிவித்துள்ளார். ஆனால் சோதனை மட்டும் போதாது. ஊழலுக்கு பின்னணியாக இருந்த ராஜா மீது சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என்றார்.

ரெய்டு கண்துடைப்பு: பா.ஜ., புடில்லியில் நிராராடியா வீடு, அலுவலகம், சென்னையில் அவரது அலுவலகம், ராஜாவின் நண்பர்கள், உறவினர்கள் என மீண்டும் சி.பி.ஐ., ரெய்டு நடத்தி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில் : சி.பி.ஐ., ரெய்டு வெறும் கண்துடைப்பு என கூறியுள்ளார். சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த ரெய்டு மூலம் எந்த ஒரு முக்கிய ஆவண‌ங்களையும் கைப்பற்ற முடியாது என தெரிவித்தார். 2ஜி விவகாரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என காட்டிக் கொள்வதற்காக மட்டுமே ரெய்டு நடத்தப்படுகிறது என தெ‌ரிவித்தார்.

2ஜி ஊழல் : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் நாட்டுக்கும் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு தெரிவித்தது. நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து பார்லி., கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர் கட்சிகள் நடத்திய அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது. தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. 2ஜி விவகாரம் ஊழல் சார்ந்தது மட்டுமில்லை அது பல பரிமாணம் கொண்டதாக இருக்கிறது என கூறியிருந்ததார்.

நாளேடு ஒன்றின் இணையதளத்தில் வெளிவந்த செய்தி

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்

 1. பாராளுமன்றம் முடக்கத்துக்கு கா‌ங்கிரஸ் தான் காரணம் : அத்வானி

 2. எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்
 3. ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்
 4. ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
 5. காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம் வந்து விட்டது: ஜெயலலிதா
 6. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்கள் கருத்து
 7. 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி
 8. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . .
 9. கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
 10. கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
 11. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் . . . ஜெயலலிதா அறிக்கை
 12. முன்னாள் அ‌மைச்சர் வீடுகளில், சி.பி.ஐ. . . .
 13. தலையங்கம்: வெட்கம் கெட்டவர்கள்!
 14. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாவை கண்டித்த உச்சநீதிமன்றம்
 15. பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்
 16. விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா
 17. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி
 18. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை
 19. பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
 20. அட்டர்னி ஜெனரல்: பிரதமர் நடவடிக்கைக்கு உத்தரவிட
 21. இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி . . .
 22. வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்
 23. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் .
 24. தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
 25. ஜெகேள்வி:காங்கிரஸ்மீது கருணாநிதிக்கு நம்பிக்கையில்லையா?
 26. காங்கிரஸின் முயற்சி தோல்வி
 27. தணிக்கை குழு அறிக்கை தாக்கல்; ஸ்பெக்ட்ரம் விவகாரம் விதி முறை மீறல்;
 28. ராசா ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்
 29. பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை நாளை தாக்கல்
 30. ராஜாவுக்கு ராஜினாமா போதாது: எதிர்க்கட்சிகள்
 31. அமைச்சர் ராஜா ராஜினாமா செய்தார்
 32. ஜெயலலிதா கோரிக்கை குறித்து முதல்வர் கருணாநிதி
 33. சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் . . .
 34. காங்கிரஸ் கட்சியுடன் கூட்ட‍ணிக்கு ஜெயலலிதா தயார்
 35. ராஜாவுக்கு எதிராக: ஜெ.,. கோரிக்கை
 36. தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: