Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஜாமீன் கிடைத்தும் விடுதலை ஆவதில் சிக்கல் . . .

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விக்கிலீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே (39). இவர் தனது இணைய தளத்தில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் தூதரகங்களின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் கைது செய்ய “இண்டர் போல்” போலீசார் “வாரண்ட்” பிறப்பித்தனர். எனவே, அவர் லண்டன் கோர்ட்டில் சரண்அடைய சென்ற போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதை தொடர்ந்து தன்னை ஜாமீனில் விடும்படி மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வக்கீல் மார்க்ஸ்டீபன் மூலம் அசாங்கே மனு செய்தார். அவரை ஜாமீனில் விட்டால் இங்கிலாந்தில் இருந்து தப்பி விடுவார் என எதிர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இருந்தும், அவரது வக்கீல் மார்க்ஸ்டீபன் திறமையாக வாதாடினார். முடிவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் 2 நபர் ஜாமீனுடன் ரூ.1 கோடியே 50 லட்சம் காப்புறுதி தொகை செலுத்த வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவரை உடனடியாக விடுதலை செய்யப்படவில்லை. ஏனெனில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுவீடன் வக்கீல்கள் உடனடியாக மனு செய்தனர். இதை தொடர்ந்து ,அந்த மனு மீதான விசாரணை 48 மணி நேரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: