Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: தமிழ்நாட்டில் 27 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை; டெல்லியில் நீரா ராடியா வீடு-அலுவலகத்தில் வேட்டை

2-ஜி ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டில் ரூ.1 லட் சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய பொது கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறி இருந்தது.  இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை மற்றும் பல்வேறு விசாரணை குழுக்கள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
“ஸ்பெக்ட்ரம்” விவகாரத்தில் முக்கிய ஆதாரமாக தொழில் ஆலோசகர் நீரா ராடியாவின் டெலிபோன் பேச்சு டேப் கிடைத்தது. நீரா ராடியாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சி.பி.ஐ. மற்றும் வருமான வரி அதிகாரிகள் 3 ஆண்டுகளாக அவரது டெலிபோன் பேச்சை பதிவு செய்து வந்தனர்.
அதில் அவர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. தொழில் அதிபர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று கொடுப்பதற்காக சம்பந்தப்பட்ட சிலரிடம் அவர் டெலிபோனில் பேசிய விபரங்கள் அனைத்தும் பதிவாகி இருந்தன.
இதன் அடிப்படையில் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். டெலிபோன் உயர் அதிகாரிகள் மற்றும் இதில் தொடர் புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனையும் நடத்தினார்கள்.
கடந்த 8-ந் தேதி டெல்லி, பெரம்பலூரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வீடுகளில் சோதனை நடத்தினார்கள். சென்னையில் உள்ள அவருடைய நண்பர் வீடு, உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது.
இந்த நிலையில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் டெல்லி, தமிழ்நாட்டில் அதி ரடி சோதனையில் ஈடுபட்டனர். டெல்லியில் தொழில் ஆலோசகர் நீரா ராடியா, டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், தொழில் அதிபர் மணீஸ் ஜெயின் ஆகியோர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 7 இடங்களிலும், தமிழ்நாட்டில் 27 இடங்களிலும் சோதனை நடந்தது.
அனைத்து இடங்களிலும் காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது.
டெல்லியில் நீரா ராடியா வின் வீடு சாத்தர்பூர் என்ற இடத்தில் உள்ளது. பிரகம்மா என்ற இடத்தில் நீராராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேசன் அலுவலகம் உள்ளது. இரு இடங்களிலும் சோதனை நடந்தது.
டெல்லியில் மட்டும் 100 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, ஊட்டி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் சோதனை நடந்தன. சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் தெருவில் நீரா ராடியாவின் அலுவலகம் உள்ளது. இங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆ.ராசாவின் ஆடிட்டர் கணபதி சுப்பிரமணியன் வீட்டிலும், பெசண்ட் நகர் ஈஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பு “நக்கீரன்” துணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் சோதனை நடந்தது.
ஆ.ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூருக்கும் சி.பி.ஐ. குழு சென்று உள்ளது. அங்கு ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா, ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்பட 6 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
இன்னொரு குழுவினர் ஊட்டிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 3 இடங்களில் சோதனை நடந்தது.
கோவையில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றிலும் சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 150 பேர் சோதனை நடத்தினார்கள்.
ஸ்பெக்ட்ரம் தொடர்பான பணபரிமாற்றம் ஹவாலா மூலம் நடந்து இருப்பது சி.பி.ஐ.க்கு தெரியவந்துள்ளது. எனவே ஹவாலா புரோக்கர் வீடு, அலுவலகங்களிலும் இன்று சோதனை நடந்தது.
(நன்றி மாலைமலர் இணையம்)

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்

  1. பாராளுமன்றம் முடக்கத்துக்கு கா‌ங்கிரஸ் தான் காரணம் : அத்வானி

  2. எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்
  3. ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்
  4. ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
  5. காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம் வந்து விட்டது: ஜெயலலிதா
  6. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்கள் கருத்து
  7. 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி
  8. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . .
  9. கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
  10. கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
  11. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் . . . ஜெயலலிதா அறிக்கை
  12. முன்னாள் அ‌மைச்சர் வீடுகளில், சி.பி.ஐ. . . .
  13. தலையங்கம்: வெட்கம் கெட்டவர்கள்!
  14. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாவை கண்டித்த உச்சநீதிமன்றம்
  15. பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்
  16. விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா
  17. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி
  18. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை
  19. பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
  20. அட்டர்னி ஜெனரல்: பிரதமர் நடவடிக்கைக்கு உத்தரவிட
  21. இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி . . .
  22. வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்
  23. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் .
  24. தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
  25. ஜெகேள்வி:காங்கிரஸ்மீது கருணாநிதிக்கு நம்பிக்கையில்லையா?
  26. காங்கிரஸின் முயற்சி தோல்வி
  27. தணிக்கை குழு அறிக்கை தாக்கல்; ஸ்பெக்ட்ரம் விவகாரம் விதி முறை மீறல்;
  28. ராசா ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்
  29. பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை நாளை தாக்கல்
  30. ராஜாவுக்கு ராஜினாமா போதாது: எதிர்க்கட்சிகள்
  31. அமைச்சர் ராஜா ராஜினாமா செய்தார்
  32. ஜெயலலிதா கோரிக்கை குறித்து முதல்வர் கருணாநிதி
  33. சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் . . .
  34. காங்கிரஸ் கட்சியுடன் கூட்ட‍ணிக்கு ஜெயலலிதா தயார்
  35. ராஜாவுக்கு எதிராக: ஜெ.,. கோரிக்கை
  36. தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: