Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏகாதசி விரதம்

கீதா ஜயந்தி!
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, “கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகின்றனர்.

ஏகாதசி  ஒரு சக்தியே!
விஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, “ஏகாதசி’ என்ற பெயரை அவளுக்குச் சூட்டினார் விஷ்ணு. அவள் கேட்டுக் கொண்டபடி, அவள் உற்பத்தியான தினத்தில், உபவாசமிருந்து தம்மைப் பூஜிப்போருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வாக்களித்தார். ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்போருக்குச் சுகங்கள், புகழ், செல்வம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகுமென்று அருளினார்.

முக்கோடி ஏகாதசி!
ராவணனின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற வேண்டி, மார்கழி மாதத்தில் வளர்பிறை ஏகாதசி அன்று, திருமாலை வணங்கினர் தேவர்கள். திருமாலும், அவர்களை காத்து அருளினார். எனவே, தேவர்களின் துன்பங்கள் போக்கவும் ஏகாதசியே வழிகாட்டியது. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் வழிகாட்டியதால், இது முக்கோடி ஏகாதசியானது.

ஏகாதசி விரதமிருந்தோர்…
* குசேலன், ஏகாதசி விரதமிருந்து, பெரிய செல்வந்தன் ஆனான்.
* தர்மராஜா, ஏகாதசி விரதமிருந்து, துன்பத்திலிருந்து விடுபட்டார்.
* ருக்மாங்கதன் ஏகாதசி விரதமிருந்து, மக்கட்பேறு பெற்றான்.
* வைகானஸ் என்ற அரசன், ஏகாதசி விரதமிருந்து, தன்  மூதாதையர்களுக்கு நற்கதி பெற்றான்.

(கண்டெடுத்ததை படைக்கிறோம்)
இதன் தொடர்புடைய தகவல்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: