ஸ்பெக்ட்ரம் “2ஜி’ விவகாரத்தில், சி.பி.ஐ., இரண்டாவது கட்டமாக மீண்டும் நேற்று டில்லி மற்றும் தமிழகத்தில் 34 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. டில்லியில் நிரா ராடியா, ஹவாலா ஊழலில் தொடர்புடைய ஏஜென்டுகளின் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களிலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது குடும்ப நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள், “நக்கீரன்’ இணை ஆசிரியர் காமராஜ், “தமிழ் மையம்’ அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பரின் அலுவலகம் என 27 தி.மு.க.,வுக்கு மிகவும்
நெருக்கமானவர்களின் இடங்களிலும் அதிரடி ரெய்டு நடந்தது. சி.பி.ஐ.,யின் இந்த அதிரடி, தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ள விவகாரம், நாட்டை உலுக்கியுள்ளது. முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. நெருக்கடி முற்றியதும், அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். அதில் இருந்து, இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது. கடந்த 8ம் தேதி, டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தியது. டில்லியில் உள்ள ராஜா அலுவலகம், தமிழகத்தில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள், நண்பர்களின் அலுவலகங்கள், வீடுகள் என ஒரே நேரத்தில் டில்லியிலும், தமிழகத்திலும் நடந்த சோதனையால், அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை நடந்த ஒரு வாரத்திற்குள் நேற்று இரண்டாவது முறையாக மீண்டும் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.
டில்லியில் அரசியல் தரகர் நிரா ராடியாவுக்குச் சொந்தமான, “வைஷ்ணவி கம்யூனிகேஷன்’ அலுவலகம், “டிராய்’ முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், ஹவாலா ஏஜென்டுகள் அலோக் ஜெயின், மகேஷ் ஜெயின் வீடுகள், அலுவலகங்கள் என 7 இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, பெரம்பலூர், நெல்லை, விழுப்புரம் என 27 இடங்களிலும் காலையில் இருந்து மாலை வரை சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரமணியம், தி.மு.க., எம்.பி., கனிமொழியுடன் இணைந்து, “சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்தும் ஜெகத் கஸ்பரின் ஆழ்வார்பேட்டை வீடு, லஸ் சர்ச் சாலையில் உள்ள, “தமிழ் மையம்’ அலுவலகம், தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் அகிலன், “நக்கீரன்’ இணை ஆசிரியர் காமராஜ் மற்றும் பெரம்பலூரில் உள்ள ராஜாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 27 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் குழு, அங்குலம், அங்குலமாக வீடுகள் மற்றும் அலுவலகங்களை அலசினர்.
சென்னையில் நிரா ராடியா மற்றும் பைஜாலுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. திருச்சியில், “டிவி’ நிருபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடந்தது. அதேபோல், விழுப்புரத்திலும் பல இடங்களில் சோதனை நடந்தது. டில்லி மற்றும் தமிழகத்தில் காலை 7 மணி முதல் 150க்கும் மேற்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே நடந்த சோதனை, முதல்வர் கருணாநிதியை கடும் அதிருப்தி அடையச் செய்தது. “ஸ்பெக்ட்ரம்’ விவகாரம், தி.மு.க.,விற்கு கடும் நெருக்கடியை அளித்து வருவதால், மன வேதனை அடைந்த முதல்வர், மலை வாசஸ்தலமான ஏலகிரிக்குச் சென்று இரண்டு நாள் ஓய்வெடுத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு தான் சென்னை திரும்பினார். முதல்வர் சென்னை திரும்பிய மறுநாளே இரண்டாவது கட்டமாக சி.பி.ஐ., சோதனை நடத்தியிருப்பது, தி.மு.க., தலைமையை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதுவும், ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தியிருப்பதைக் கண்டு ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
( நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி )
மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்
-
ராசாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு; நிருபர்- அதிகாரி வீட்டில் புகுந்தது சி.பி.ஐ.,
- பாராளுமன்றம் முடக்கத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் : அத்வானி
- எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்
- ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்
- ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
- காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம் வந்து விட்டது: ஜெயலலிதா
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்கள் கருத்து
- 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் . . . ஜெயலலிதா அறிக்கை
- முன்னாள் அமைச்சர் வீடுகளில், சி.பி.ஐ. . . .
- தலையங்கம்: வெட்கம் கெட்டவர்கள்!
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாவை கண்டித்த உச்சநீதிமன்றம்
- பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்
- விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை
- பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
- அட்டர்னி ஜெனரல்: பிரதமர் நடவடிக்கைக்கு உத்தரவிட
- இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி . . .
- வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்
- ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் .
- தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
- ஜெகேள்வி:காங்கிரஸ்மீது கருணாநிதிக்கு நம்பிக்கையில்லையா?
- காங்கிரஸின் முயற்சி தோல்வி
- தணிக்கை குழு அறிக்கை தாக்கல்; ஸ்பெக்ட்ரம் விவகாரம் விதி முறை மீறல்;
- ராசா ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்
- பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை நாளை தாக்கல்
- ராஜாவுக்கு ராஜினாமா போதாது: எதிர்க்கட்சிகள்
- அமைச்சர் ராஜா ராஜினாமா செய்தார்
- ஜெயலலிதா கோரிக்கை குறித்து முதல்வர் கருணாநிதி
- சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் . . .
- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ஜெயலலிதா தயார்
- ராஜாவுக்கு எதிராக: ஜெ.,. கோரிக்கை
- தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!