விழுப்புரம் அருகே உள்ள திரௌபதியம்மன் கோவில் உள்ள சுவாமி சிலையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் அங்கு பரபரப்பு நிலைவியது. விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூரில் பழமையான திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள திரௌபதியம்மன் மூலவர் சிலையில் இருந்து திடீரென தண்ணீர் வடிந்ததாக தகவல் காட்டு தீயாய் பரவியதால் பரபரப்புடன் காணப்பட்டது. அம்மனின் தேகத்திலிருந்து தண்ணீர் கொட்டியது ஆச்சர்யத்தை, இதனால் ஏதேனும் ஊருக்கு கேடு விளையுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அங்கு சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் எல்லோரும் நேரில் பார்த்து அதிசயித்து பக்தியுடன் வணங்கி செல்கின்றனர்.
(நாளிதழில் வெளிவந்த செய்தி)