கடந்த 2009 ம் ஆண்டில் ஜூலை மாதம் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தபோது அவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் வீட்டில் அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்ற ராகுல் திமோதிரோமருடன் பேசினார். அவரது பிரச்சனைக்குரிய பேச்சுதான் விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சனை ஸ்பெக்ட்ராம் விவகாரத்திற்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறது.
ராகுல் காந்தி என்ன பேசினார் ? :
இந்தியாவில் காவி பயங்கரவாதம் மற்றும் மதவாதிகள் காரணமாக இந்திய அரசியலுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது என்றும் இந்த பயங்கரவாதம் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினரை விட கொடியது என்றும். தனது கவலை தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு உள்ள பயங்கரவாதம் குறித்தும் விவாதித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி கண்டனம்:
இதற்கு பாரதீய ஜனதா கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு மட்டுமின்றி,. ராகுலின் பேச்சு அவருடைய அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுவதாக ரவி்சங்கர் பிரசாத் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்ந இதன்மூலம் ஒரு பயங்கரவாத அமைப்பை நியாயப் படுத்துகிறாரா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார் ,
மேலும் நம் நாட்டு பிரச்னையை பாராளுமன்றத்தில் பேசியிருக்கலாம் ஆனால் அதை விடுத்து அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள கூடாது என்றும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளதோடு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களை எல்லாம் அமெரிக்க தூதரிடம் பேசியது முற்றுலும் தவறானது என்றும் இது பெரும் அதிர்ச்சியை தருகிறது.என்றும் காங்கிரஸ் கட்சி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் விளக்கம்
காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, விக்கிலீக்ஸின் இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உண்மைகள் என்ன என்பது ஆராயப்படும் என்றும் பயங்கரவாதம் எந்த ஒரு வடிவத்தில் இருந்தாலும் அது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்பதை தான் ராகுல் கூறியதாகவும் தெரிவித்தார்.