Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அஞ்சலியும், அமலா பாலும் . . . .

ஹாலிவுட் பட நிறுவனம், டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்க விருக்கின்றனர். ஒருவர் “அங்காடித் தெரு” புகழ் நடிகை அஞ்சலி, இன்னொருவர் “சிந்து சமவெளி சர்ச்சை” புகழ்  நடிகை அமலா பால் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதில்  இரண்டு கதாநாயகர்கள் கதையான‌ இந்த படத்தின் நாயகர்களாக “வாமணன்” படத்தில் நடித்த நடிகர் ‌ஜெய்யும், நடிகர் “பசங்க” மற்றும் “களவானி” படங்களில் நடித்த விமலும் நடிக்கிறார்கள். அந்த புதிய படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இந்த புதிய படத்தில் இரண்டு வெற்றி நாயகிகள் நடிக்கப்போவது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதே முருகதாஸின் அதீத எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து, ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று கோடம்பாக்கம் வட்டாரம் கருதுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: