Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் ஆவேசம்

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், “என் மீதான குற்றச் சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: எனக்கு எதிரான இவ்வழக்கில், தனிப்பட்ட, உள்நாடு மற்றும் சர்வதேச உள்நோக்கங்கள் உள்ளன. ஆனால், இதன் மூலம் ஐரோப்பாவை சங்கடப்படுத்தும் சில உண்மைகள் வெளி வந்துள்ளன. உதாரணமாக, தனிநபர் ஒருவரை, ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்கு, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இன்றி நாடு கடத்த முடியும் என்பது இப்போது தெரிந்துள்ளது.இவ்வாறு அசாஞ்ச் தெரிவித்தார்.

இதற்கிடையில் அசாஞ்சை ஜாமீனில் எடுப்பதற்காக, கோர்ட்டில் செலுத்த வேண்டிய ஒன்றரை கோடி ரூபாய், “ட்விட்டர்’ இணைய தளம் மூலம் திரட்டப்பட்டு வருகிறது.பிரிட்டன் பத்திரிகையாளர் ஜான் பில்ஜர், பிரிட்டனில் இயங்கி வரும் புலனாய்வுப் பத்திரிகையியல் மையத்தின் இயக்குனர் காவின் மெக் பேடென் மற்றும் சூசன் பென் ஆகிய மூவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, இந்நிதி வசூலை கண்காணிக்கும்.

இதற்கிடையில், “விக்கிலீக்ஸ்’ நிறுவனமும், அசாஞ்சும் ஆஸ்திரேலிய   சட்டத்தை மீறவில்லை என, அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். “விக்கிலீக்ஸ்’ செயல் குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஜூலியா கில்லார்டு, “பொறுப்பற்ற செயல்’ என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆஸி.,போலீசார், “விக்கிலீக்ஸ் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் பரிசோதித்தோம். ஆஸி., சட்டப்படி அந்நிறுவனம் குற்றம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த பிரதமர் கில்லார்டு,”என் கண்டனத்தில் மாற்றம் இல்லை. சிலர் அசாஞ்சுக்கு விசிறியாக இருக்கலாம். ஆனால், நான் அவரது விசிறி இல்லை. அதேநேரம், எதிர்காலத்தில் அவரது வெளியீடுகளைக் கருத்தில் கொண்டு சட்டத்தை மாற்றும் கருத்தும் எங்களுக்கு இல்லை’ என்று கூறியுள்ளார். (நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி)

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: