Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. அதிரடி : 1 வாரத்தில் கைது

 

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு முறை கேடுகள் குறித்து கடந்த ஆண்டே சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய பிறகே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை சூடு பிடித்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், தரகர்கள், ஹவாலா பேர்வழிகள் உள்பட பலரது வீடுகளில் சி.பி.ஐ. இதுவரை 2 கட்ட சோதனை நடத்தியது. அந்த சோதனைகளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின.
கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், பென்டிரைவ்களில் உள்ள ரகசிய தகவல்கள் பலரை சி.பி.ஐ.யிடம் சிக்க வைத்துள்ளது. அத்தகைய நபர்களிடம் சி.பி.ஐ. தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10- ந்தேதிக்குள் விசாரணை களை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியதுள்ளது. எனவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்த நடவடிக்கை களில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் சி.பி.ஐ.க்கு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர் புடைய சிலரை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று சி.பி.ஐ. வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இதற்கிடையே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றொரு கோணத்தில் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை கேடுகளில் தொடர்புடைய பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த முதலீடு தகவல்களை திரட்டும் பணியில் அமலாக் கப்பிரிவு ஈடுபட்டுள்ளது.

(கண்டெடுத்த செய்தி)

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்:


 

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: