Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு

கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பின் எண் 8.0.552.215. புதிதாக இதில் பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த 800 பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு வளையங்கள் உறுதி படுத்தப்பட்டு ள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிப்பினைப் பெற http://www.google.com /chrome/intl/en/landing_chrome.html?hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.  நீங்கள் ஏற்கனவே குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பிரவுசர் தானாக, இந்த அப்டேட் டினைக் கண்டறிந்து உங்கள் அனுமதியுடன் மேம்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் குரோம் பிரவுசர் மக்களிடையே கூடுதலாக இடம் பெறும் என்றும், இத்தகைய தொடர்ந்த மேம்படுத்துதல்கள் மூலம், 2011 அல்லது 2012  ஆம் ஆண்டில் இந்த பிரவுசர், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் இணைக்கப்பட்டுள்ள பி.டி.எப். வியூவர், பி.டி.எப். பைல்களை, எச்.டி.எம்.எல். பைல்களைப் போலவே காட்டும். இதனால் தனியே பி.டி.எப். வியூவர் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. பிடிஎப் வியூவர்  sandbox   என்ற அமைப்பினுள் வருவதால், இது கம்ப்யூட்டரில் உள்ள மற்ற பகுதிகளுக்குப் பிரச்னை தராது. அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையூறு தராது.  இந்த புதிய பிரவுசரின் மிக முக்கிய அம்சம், வர இருக்கும் குரோம் வெப் ஸ்டோருடன் இணைந்து செயல்படும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதுதான். இந்த சிறப்பம்சத்தை நாம் இப்போது காண முடியாது. ஏனென்றால் குரோம் வெப் ஸ்டோர் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில், ஏன் சில நாள்களில் இது தொடங்கப்படலாம். குரோம் வெப் ஸ்டோரில், இணைய அடிப்படையிலான பல அப்ளிகேஷன்கள் கிடைக்கும். சில இலவசமாகவும், சில கட்டணம் செலுத்தியும் கிடைக்கும். இவை குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணையும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: