அமெரிக்க அதிபர் ஒபாமா, புகைப்பழக்கத்தை நிறுத்தியதால், அவரை பின்பற்றி, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களது புகைப் பழக்கத்திற்கு விடை கொடுத்து ள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறி யுள்ளார். அமெரிக்காவில், புகை யிலை பொருட்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு 5 கோடி ஆண்கள் சிகரெட் புகைக் கின்றனர். அமெரிக்காவில், ஐந்து பேரில் ஒருவருக்கு புகைப்பழக்கம் உள்ளது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், அங்கு ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். அமெரிக்க வெள்ளை மாளிகை
செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ், அண்மையில் நடந்த வழக்கமான செய்தியாளர் சந்திப்பின்போது, ஒபாமா புகைப்பழக்கத்தை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்திவிட்டதாக தெரிவித்தார். இதனை பின்பற்றி, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களது புகைப் பழக்கத்திற்கு விடை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒபாமா, புகைப் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி விட்டாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்பது மாதங்களாக அவர் புகைப் பிடிக்கவில்லை. கடந்த ஒன்பது மாதங்களில், அவர் புகைப் பிடிப்பதற்கான எந்த ஒரு அறிகுறியையும் நான் பார்க்கவில்லை. ஒருவேளை அவர் அந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக போராடிக் கொண்டிருப்பதால், அதுகுறித்து தெரிவிக்காமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன். தற்போது, “நிகோடின்’ கலந்த பபிள் கம்மை சுவைக்கிறார். இது, அவர் புகைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமல் தடுக்கிறது. சிகரெட் புகைப்பதால், பெருமிதப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மாறாக, அதை புகைப் பவர்களுக்கும், அவரது அருகிலிருப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. ஒபாமாவை பின்பற்றி, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் புகைப்பழக்கத்திற்கு விடை கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது மிகவும் பெருமைப் படக்கூடிய செய்தியாகும். இவ்வாறு ராபர்ட் கிப்ஸ் கூறியுள்ளார்.
(நாளேடுகளில் கண்டெடுத்த செய்தி)