அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கு கல்வி உதவி திட்டம் வழங்குவதற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த அக்கட்சியின் பொது செயலரும் எதிர்க் கட்சித் தலைவருமாற ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறுகையில் , ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்யவேண்டும் என்றும். கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆந்திராவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க இருப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.