குமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் தாமஸ் விஜயன் (வயது 47). கிறிஸ்தவ மதபோதகர். பல
மொழிகளில் பாடும் திறன் கொண்டவர். கடந்த 2007-ம் ஆண்டு பெங்களூரில் 72 மணி நேரம் கிறிஸ்தவ பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தார். இந்நிலையில் புதிய கின்னஸ் சாதனை படைக்க விரும்பினார்.

அதன்படி தாமஸ் விஜயன் கடந்த 26-ந் தேதி கன்னியாகுமரியில் உள்ள ஜெபசக்தி வளாகத்தில் 105 மணி நேரம் பாடும் நிகழ்ச்சியை தொடங்கினார். குமரி மாவட்ட பெந்தேகோஸ்தே தலைவர் பேராயர் தேவசுந்தரம் ஆசீர்வதித்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பாடல்களை பாடிய தாமஸ் விஜயன் நேற்று (31-ந் தேதி) 2.45 மணிக்கு தனது சாதனையை முடித்தார். 13 மொழிகளில் பாடல்களை பாடிய அவர் ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்தை விட 106 மணி 20 நிமிடம் பாடியுள்ளார்.
கடைசி நாளான நேற்று தாமஸ்விஜயன் பாடும் நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமானோர் அங்கு குவிந்தனர். லண்டனில் இருந்து கின்னஸ் புத்தக பதிப்பக மேலாளர் கிறிஸ்டி மணிகணக்கை பதிவு செய்து கொண்டார். குஜராத்தில் பெண்ணொருவர் 101 மணி நேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தாமஸ்ஜெயன் தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார்
(கண்டெடுத்த செய்தி)