சென்னை ஜாம் பஜாரில் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை மேயர் சிட்டிபாபு தெருவில் நண்பர்கள் 5 பேர் மது அருந்தினார்கள். ஒருவருக் கொருவர் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து தெருவைச் சேர்ந்த சிலரும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டனர். போதை அதிகமானதால் ஒருவருக் கொருவர் பேசியது வாக்கு வாதமாகியது. பேச்சு அதிகமாகி ஒருவருக் கொருவர் அடித்துக் கொண்டனர். இதில் என்ஜினீயர் ஜெயக் குமாரின் மோட்டார்சைக்கிளை அடித்து நொறுக்கி இருக்கையை கிழித்து தீ வைத்து விட்டனர். இதை பார்த்த மற்ற நண்பர்கள் உடனடியாக தீயை அணைத்து விட்டனர். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலை சமாதானம் செய்து வைத்தனர். இந்த தகராறு குறித்து ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்தினார்கள். (நாளேடுகளில் வெளிவந்துள்ள செய்தி).