ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் தலைப் பகுதியில் பொருத்தப் பட்டிருந்தது இந்த என்ஜினின் அடிபாகத்தில் 10 இணைப்புகள் உள்ளது. இது கம்ப் யூட்டரில் இருந்து வெளியாகும் உத்தரவுகளை செயல்படுத்த உதவும்.
இதில் உள்ள எரிபொருள் பகுதிகள் ஒவ்வொன்றாக இயங்கவும், அவை தனித்தனியாக பிரிந்திடவும், இந்த இணைப்பு கள்தான் உதவும். ஜி.எஸ். எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 292 வினாடிகளுக்குப் பிறகுதான் கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர் மூலம் இந்த உத்தரவுகள் வரத்துவங்கும் ஆனால் கடந்த 25-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக் கெட் ஏவப்பட்ட 47.8வது வினாடிகளிலேயே 10 இணைப்புகளும் உத்தரவு களை பெற்று ஒவ்வொரு பகுதியாக துண்டித்துக்கொண்டதன் தொடர் ச்சியாக ராக்கெட்டின் தொடர் இயக்கம் நின்றுவிட்டது. அந்த 10 இணைப்புகளும் துண்டிக்கப் பட்ட மறு வினாடியே ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டு அதன் பாதையை விட்டு விலகி 53.8-வது வினாடிகளில் ராக்கெட் வெடிக்க வைத்து தகர்க்கப்பட்டதாக முதல் கட்ட ஆய்வில் தகவல்கள் தெரிய வந்துள்ளது. மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன•
இதன் தொடர்பான வீடியோ காட்சி