Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்; பலமணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என்று உலகம் முழுவதும் வாழும் இந்து பக்தர் களிடையே ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. இதனால் முக்கிய நாட்களில் திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல லட்சமாக உயரும். 2011-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு புத்தாண்டு தரிசனத்துக்காக திருப்பதி திருமலையில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் லட்சக் கணக்கில் குவிந்தனர்.
இதனால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கீழ் திருப்தியில் உள் விடுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. திருமலையில் தங்கும் விடுதியில் இடம் கிடைக்காத நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆங்காங்கே சாலை ஓரம் தங்கினார்கள்.
புத்தாண்டின் முதல் நாளான இன்று அதிகாலை ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று காலை முதலே திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாதபடி இருந்தது. அதிகாலை தரிசனத்துக்கு திட்டமிட்டு நேற்று மாலையே பக்தர்களில் பலர் வரிசையில் நிற்கத் தொடங்கி விட்டனர். நேற்றிரவு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் வரிசை நீண்டிருந்தது. விடிய, விடிய வரிசையில் காத்து நின்றனர். பக்தர்கள் இன்று காலை ஏழு மலையானை தரிசனம் செய்தனர்.  நேற்று மாலை வரிசையில் நின்ற பலருக்கு பல மணி நேர காத்திருப்புக்குப்பிறகு இன்று அதிகாலை தரிசனம் கிடைத்தது.
பக்தர்களை வரிசையில் நிற்க வைத்து தரிசனத்துக்கு அனுப்ப கோவில் நிர்வாகிகள் கடுமையாக திணறினார்கள். இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்றனர். பெரும்பாலான பக்தர்கள் அலிபிரியில் இருந்து கோவி லுக்கு நடந்தே சென்றனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதை கணக்கிட்டு கூடுதல் லட்டு தயாரித் திருந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கூடுதல் லட்டு வாங்கிச் சென்றனர். பக்தர்கள் லட்சக் கணக்கில் திரண்டதால் அவர்களது பொழுது போக்குக்காக திருமலையில் பல்வேறு இடங்களில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன

நாளேடுகளில் கண்டெடுத்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: