Thursday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

துவங்கியது தேர்தல் ஆண்டு : தொண்டர்கள் மகிழ்ச்சி, தலைவர்கள் பதட்டம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல், அதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் என, “தேர்தல் ஆண்டாக’ மலர்ந்துள்ள ஆங்கில புத்தாண்டை, அரசியல் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்று ள்ளனர். இந்த தேர்தல்கள் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், தேர்தலை எதிர் கொள் வதற்கான யுக்திகள், கூட்டணி, வெற்றி, தோல்வி ஆகியவை குறித்த பதட்டம் கட்சித் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒவ்வொரு புத்தாண்டும் முக்கியமான நிகழ்வுகளை தாங்கி வருவது வழக்கம். பிரபலமான விளையாட்டுப் போட்டிகள், திரு விழாக்கள் என ஒவ்வொரு ஆண்டிலும் நடக்கும் நிகழ்வுகளை முன்னிறுத்தி, அந்த ஆண்டு துவக்கத்தை கொண்டாடி வருவது வழக்கமாக இருக்கிறது.அந்த வகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு மே மாதத்திற்குள்ளாக சட்டசபை பொதுத்தேர்தலும், அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலும் நடக்கவிருப்பதால், இந்த ஆண்டை, “தேர்தல் ஆண்டு’ என்று அரசியல் வட்டாரத்தில் அழைக்கின்றனர்.அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு முக்கியத் துவம் கிடைக்கும் வகையில், தற்போதைய தேர்தல்கள், “திருவிழா’க்களாக நடந்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் திருவிழாவிற்கான முஸ்தீபுகள் வேகமாகியுள்ளன. தேர்தல் கமிஷன், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் என, அனைத்து தரப்பும் இதனால் பரபரப்பாகியுள்ளன.

கடந்த நான்காண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் பெருமளவு பணம் விளையாடியது. “ஓட்டுக்கு நோட்டு’ என்ற புது கலாசாரம் தமிழகத்தில் வேகமாக பரவியுள்ளது. இடைத் தேர்தல்களின்போது, தொண்டர்களுக்கு கிடைத்த மரியாதையும், பணமும் அவர்களை திக்கு முக்காட வைத்தது. இடைத்தேர்தல் நடக்காத தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆதங்கப்படுமளவிற்கு இந்த நிகழ்வுகள் நடந்தன.சட்டசபை தேர்தல் மூலம், தற்போது அனைத்து தொகுதிகளிலும் பணம் விளையாடவுள்ளது. இதை எதிர்பார்த்து தொண்டர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அதோடு, தேர்தல் பணி செய்வதில் அரசியல் கட்சியினருக்கு உள்ள இயல்பான ஆர்வமும் சேர்ந்துள்ளதால், அவர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டோடுகிறது.

அதே நேரத்தில், கூட்டணி விவகாரம், தேர்தலை எதிர் கொள்வதற்கான யுக்திகள், வேட்பாளர் தேர்வு, பெரும் தொகையை செலவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தலை வலியால் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், இந்த பதட்டம் தொடர்கிறது. சிறிய கட்சிகள் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றன.

நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி

Leave a Reply