இந்த வீடியோ படத்தை வெளி யிட்ட நித்யானந்தா வின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் சாமியார் மீதும், ரஞ்சிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தார். நித்யானந்தா கைதாகி பின் விடுதலையானார். ரஞ்சிதாவை போலீசார் தேடினர்.
ஆசிரமத்தில் உள்ள குழு பெண் சாமியார்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என்னையும் கற்பழிக்க முயன்றார். ரூ. 2
கோடி பணம் தரும்படியும் மிரட்டினார். எனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கிறார்கள் என் றெல்லாம் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் நேற்று அதிரடியாக பத்திரிகையாளர்கள் முன் தோன்றி பரபரப்பாக பேட்டி அளித்தார். ரஞ்சிதா கூறியதாவது:-
நித்யானந்தாவுடன் நான் ஆபாசமாக இருப்பது போன்று வெளியான வீடியோ படம் போலியானது. ஆபாச வீடியோ உண்மையானது என்று தடயவியல் சோதனையில் உறுதி
செய்யப்பட்டதாக கூறுகின்றனர். படத்தில் இருப்பது நான் அல்ல. இதன் பின்னணியில் பெரிய சதிவலை இருக்கிறது. ஒரு கிறிஸ்தவ அமைப்பும் அரசியல்வாதிகளும் பின்னணியில் இருக்கிறார்கள்.
எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிப்ப தாக இருந்தால் அவர்கள் விவரங்களை பகிரங்கமாக வெளியிடுவேன். வீடியோ படத்தை வெளியிடாமல் இருக்க என்னிடம் பேரம் பேசினார்கள். ரூ. 20
கோடி தர வேண்டும் என மிரட்டினார்கள்.“ வீடியோ படம் வெளியான பிறகு என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. மிரட்டல்கள் வந்தன. நான் ஒரு பெண் என்பதால் பயந்து விட்டேன். போலீசாரி டமும், பத்திரிகை யாளர்களிடமும் பேசக்கூடாது என்று மிரட்டல் விடுத்தவர்கள் எச்சரித்தனர்.
போலீசாரிட மிருந்தும் தொந்தரவுகள் வரலாம் என அஞ்சினேன். எனவே கடந்த ஆண்டு மார்ச் 3-ந்தேதி அமெரிக்கா சென்றேன். ஜூன்
மாதம் இந்தியா திரும்பினேன். சென்னையில் தான் இருந் தேன். முதல்-அமைச்சர் பாதுகாப்பு கொடுத்தார். நான் நல்ல குடும்பத்து பெண். மிரட்டல் காரணமாகவே வெளியே வர வில்லை. இப்போதும் மிரட்டல்கள் தொடர்கிறது. லெனினுக்கும் எனக்கும் முன் பகை கிடையாது. அவர் என்னை கற்பழிக்க முயன்றார்.
லெனின் பின்னால் சில முக்கிய புள்ளிகள் இருந்து இயக்குகிறார்கள். நித்யானந்தாவின் லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி. மற்றவர்கள் போல் ஆசிர மத்துக்கு வந்து போனேன். தவறான காரியங்களில் ஈடுபடவில்லை. திட்டமிட்டு சிக்கலில் மாட்டி விட்டனர். வீடியோ படம் வெளி யானதில் இருந்து வேதனைப்பட்டு வருகிறேன்.
என் மீது பழி போட்டபிறகும் குடும்பத்தினர் நம்பிக்கை வைத்து ள்ளனர். இப்போது வக்கீல்கள் கொடுத்த தைரியத்தில்தான் வெளியே வந்தேன். சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு ரஞ்சிதா கூறினார்
கண்டெடுத்த செய்தி
இதன் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி – வீடியோ
நித்தியானந்தா – ரஞ்சிதா இடம்பெற்ற ஆபாச வீடியோ உண்மையானவையே முன்னாள் சீடர் லெனின் கருப்பன் பேட்டி