Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

அங்காடித் தெரு படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

1. அங்காடித் தெரு

ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம்,

2. எந்திரன்

இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு பெரும் பொருட்செலவுடன் உருவாகி வெளிவந்த திரைப்படம். தமிழ் சினிமாவில் இது ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

3. மைனா

இயக்குநர் பிரபு சாமலன் இயக்கி, உதயநிதி ஸ்டாலின மற்றும் எஸ்.கல்பாத்தி அகோரம் இணைந்து தயாரித்து, சிந்து சமவெளி படம் மூலம் மிகுந்த சர்ச்சைக்கு ஆளான அமலா பால் கதாநாயகியாக நடித்த வெளிவந்து காதலை புதிய கோணத்தில் உருவகப்படுத்தி யிருக்கும் படம் மைனா திரைப்படம்

4. விண்ணைத்தாண்டி வருவாயா

கௌதவ்மேனன் இயக்கி உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில், நடிகர் சிம்பு,  நடிகை திரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் இந்த விண்ணைத் தாண்டி வருவாயா. இத்திரைப்படம், நடிகர் சிம்புவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தியது.

5. சிங்கம்

சன்பிர்க்கஸ் தயாரித்து ஹரி இயக்கி நடிகர் சூரியா, அருந்ததி புகழ் அனுஷ்கா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் மிரட்டிய திரைப்படம் தான் சிங்கம்.

6.மதராசபட்டினம்

இயக்குனர் விஜய் இயக்கத்தில்ந நடிகர் ஆர்யா, எமி ஜாக்சன் நடித்து , உதயாநிதி ஸ்டாலின் இந்தியாவில் இப்படத்தை வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்ற படம். இதன் சிறப்பே சுதந்திர போராட்ட காலத்தில்  நடந்த்தாக காட்டப்பட்டதே!

7.நான் மகான் அல்ல

சுசிந்திரன் இயக்கி, கார்த்தி, காஜல்அகர்வால் நடித்து; தயாநிதிஅழகிரி வெளியிட்ட திரைப்படம் இதில் கருத்தி வீரன் கார்த்தியை புதிய கோணத்தில் காட்டியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று

8.பாஸ்(எ)பாஸ்கரன்

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து எம்.ராஜேஷ் இயக்கி ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடித்து, வெளிவந்த திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இத்திரைப்படத்தின் நகைச்சுவை நன்கு ரசிக்கும்படியாக இருந்தது. அதிலும் ஆர்யா ஒவ்வொரு இடங்களிலும் சந்தானத்தின் தோளில் கைபோட்டு நீ எ நண்பேண்டா . . என்ற ஒற்றை வசனம் மிகவும் பிரபலமானது.

9.களவாணி

நஷீர் தயாரித்து சற்குணம் இயக்கி, பசங்க திரைப்பட புகழ் விமல் மற்றும் புதுமுகம் ஒவியா சிறப்பான நடிப்பில் வெளிவந்த திரைப்படம். களவாணி இத்திரைப்படத்தில் விமல் ஓவியா, இளவரசு, சரண்யா ஆகியோரது யதார்த்தமான நடிப்பும், கஞ்சா கருப்பு இடம் பெறும் நகைச்சுவை காட்சிகளும் பெரிதும் மக்களால் கவரப்பட்டது.

10.பையா

லிங்குசாமி இயக்கி க்ளவ்ட் நயன் மூவீஸார் தயாரித்து பருத்தி வீரன் புகழ் கார்த்தி நடிகை தமன்னா நடித்து வெளியான படம் பையா  இப்படத்தின் சிறப்பம்சமே ஒரு காரில் தொடங்கி அதே காரில் முடியும் வகையில் படத்தை எடுத்திருப்பது பாராடப்படவேண்டிய விஷயமே!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: