Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.பி.பி.எஸ்.: தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில்

“எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயம்’ என, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு இந்திய கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவில், ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வர இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து தனியார் கல்லூரிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. தமிழகம் உள்ளிட்ட நுழைவுத்தேர்வை ரத்து செய்துள்ள சில மாநில அரசுகளும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டன. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்திய மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வு கொண்டு வரும் முடிவை எடுக்கலாம் என, இடைக் கால உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, இந்திய மருத்துவக் கவுன்சில் தங்கள் விதிமுறை களில் திருத்தம் கொண்டு வந்து கெசட்டில் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சம் வருமாறு: எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் இனி சேர வேண்டுமானால் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் 40 சதவீத மதிப் பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள, இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். சிறப்புப் பிரிவு மாணவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்த ஆண்டு மட்டும் தகுதி மதிப்பெண்ணை குறைத்து அனுமதிக்க, இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவெடுக்கும். தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறாத எந்த மாணவரையும் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்க்க அனுமதி இல்லை. மாணவர்களின் கல்வித் தகுதியை பரிசீலிக்கும்போது, “கணித பாடத்தில் பெற்ற மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது’ என்றிருந்த விதிமுறை நீக்கப்படுகிறது. முதுநிலை படிப்பில் சேருவதற்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அவசியம். அரசு சாராத மருத்துவக் கல்வி மையங்களில் 50 சதவீத இடங்களை மாநில அரசால் நிரப்பப்படும். மீதி 50 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளால் தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் இருந்து நிரப்பிக் கொள்ளலாம். இவ்வாறு கெசட் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு : இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்திய மருத்துவ சங்க தலைவரும், “டிடி’ மருத்துவக் கல்லூரி நிர்வாகியுமான டி.டி.நாயுடு, “”இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த முடிவுக்கு மத்திய அரசு, சட்ட அமைச்சகம், பார்லிமென்ட், ஜனாதிபதி ஒப்புதல் பெறப் படவில்லை. சட்டத்தை மீறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் தனியார் சிறுபான்மை கல்லூரிகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்,” என்று கூறியுள்ளார்.

நாளேடுகளில் கண்டெடுத்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: