Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மன்மதன் அம்பு படத்தில் ஓவியா…

“மன்மதன் அம்பு’ படத்தில் கௌரவ வேடம் ஏற்றது குறித்து ஓவியாவிடம் பேசினால்… “கமல் படத்தில் நடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். அது தான் இதற்கு காரணம். அதிகப் படியான காட்சிகளில் வராதது குறித்து வருத்தம் தான். ஆனால் அது கௌரவ வேடம் தானே. அதனால் வருத்தமில்லை. இருந்தும் “மன்மதன் அம்பு’ படத்தில் கமலுடன் நான் இருப்பது போன்ற காட்சி இல்லை. அதில் பெரிய வருத்தம் இருக்கிறது. மாதவன் கூட மட்டும் தான் இருப்பேன். என்னுடைய நிறைய நண்பர்களுக்கு மன்மதன் அம்பு’ படத்தில் நான் நடித்ததே தெரியாது. தியேட்டரில் பார்த்ததில் சிலருக்கு அதிர்ச்சி.என்னைப்பற்றி சிலர் வேண்டுமென்றே எதிர்மறையான விஷயங்களை சொல்கிறார்கள். அதிக சம்பளம் கேட்கிறேன். குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்பன உள்ளிட்ட விஷயங்கள் அதில் அடங்கும். அதில் உண்மை யில்லை. என்னை வைத்து படம் தயாரிப்பவர்கள், இயக்குநர் களிடம் கேட்டுப் பாருங்கள். உண்மை என்னவென்று புரியும்’ என்றார் ஓவியா.

(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: