Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எண்களை எழுத்தில் மாற்ற …

உங்கள் ஒர்க் ஷீட்டில் பல செல்களில் டேட்டா மதிப்புகள் எண்களில் தரப்பட்டுள்ளன. நீங்கள் இதனை எழுத்துக்களில் டெக்ஸ்ட்டாக மாற்ற எண்ணுகிறீர்கள். எப்படி இந்த மாற்றத் தினை ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.

இதற்குப் பல வழிகள் உள்ளன.
1. முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவில் இருந்து Cells என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே Format Cells டயலாக் பாக்ஸைக் காட்டும். (எக்ஸெல் 2007 தொகுப்பில், ரிப்பனின் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். செல் குரூப்பில் பார்மட் என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், பார்மட் செல்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.)
3.அடுத்து Number என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. அடுத்து கிடைக்கும் formatting Categories என்பதில் Text என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
6. இதன் பின்னர், கண்ட்ரோல் + சி (Ctrl+C) அழுத்தவும். இந்த செயல், நீங்கள் ஸ்டெப் 1ல் தேர்ந்தெடுத்த செல்களைக் காப்பி செய்திடும்.
7. பின்னர் எடிட் மெனுவில் Paste Special என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது எக்ஸெல்
Paste Special டயலாக் பாக்ஸைக் காட்டும்.
8. இனி, Values ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
9. இறுதியாக ஓகே கிளிக் செய்திடவும்.
இன்னொரு வழியாக நீங்கள் TEXT ஒர்க்ஷீட் செயல்பாட்டினைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் செல் A7ல் 6789 என்ற எண்ணைக் கொண்டுள்ளீர்கள். இப்போது செல் B7ல், =TEXT(A1, “#,##0.00”) என்னும் பார்முலா வினை டைப் செய்திடவும். இந்த TEXT பார்முலா, எண்ணில் ஆயிரங்களைப் பிரிக்கும் கமாவினைச் சரியான இடத்தில் வைத்து, இரண்டு தசம ஸ்தானங்களை, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் வைக்கும். இனி, இந்த எண் டெக்ஸ்ட்டாக மாற்ற, =TEXT(A1, “0”) என்ற பார்முலாவினைப் பயன்படுத்தலாம். தரப்பட்டுள்ள எண் மதிப்பு சொற்களில் காட்டுவதற்கு இந்த பார்முலா செயல்படும்.

(கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: