கராச்சி, ஜன. 5- பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சி
விளங்குகிறது. இங்கு எதிர்க்கட்சியான முத்தாகிதா குயாமி இயக்க குல்பகர் பகுதியின் தலைவர் அதில் ஜப்ரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் நஷிமா பாத்தில் நேற்று மாலை நடந்தது. முத்தாகிதா குயாமி இயக்கம் பாகிஸ்தானின் கூட்டணி அரசில் அங்கம் வகித்தது. அக்கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேற்று முன்தினம் விலக்கி கொண்டது. இதனால் பிரதமர் கிலானியின் அரசு ஆட்டம் கண்டுள்ளது.
இந்த நிலையில் இக்கட்சியின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டது அதன் தொண்டர்களிடம் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் தீ வைப்பு, அடிதடி மோதல் போன்றவை நடந்தது. ஒருவரை யொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
இச்சம்பவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தை தொடர்ந்து கராச்சி நகரம் பதட்டத்தில் சிக்கி தவிக்கிறது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடைகள் மற்றும் வங்கிகளுக்கு தீ வைக்கப்பட்டது. எனவே வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளும் அடைக்கப்பட்டுள்ளன. அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கி கொண்டதால் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் தங்களது கட்சி தலைவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி)