Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சரித்திரம் படைக்கப்போகும் “சாமிபுள்ள‌”

ராமநாதபுரம் மாவட்டம். எப்போதாவது விஷேசம். வானம் பார்த்த பூமி. ஒரு பக்கம் வறட்சி. இன்னொரு பக்கம்..? அங்கும் வறட்சி தான். சில வரப்புகள், சில வீடுகள். இப்படி ஒரு இடத்தில் 50 வருஷங் களுக்கு முன்னாடி நடந்த உண்மை சம்பவத்தில் என் சினிமா கற்பனைகளைக் கொஞ்சம் கலந்திருக்கேன். இப்படி ஒரு சினிமாவை பார்த்து எவ்வளவு நாளாச்சுன்னு நீங்க உள்ளுக்குள்ளே பேசிக்கலாம். உச் கொட்டிக்கலாம். எல்லா நிறைவையும் இது நிச்சயம் தரும்” உறுதியாகப் பேசுகிறார் இயக்குநர் ரங்கராஜன். “சாமிபுள்ள’ படத்தின் இயக்குநர். ஆளாளுக்கு கிராமத்துக்குக் கிளம்பிட்டாங்க, நீங்க சொல்லுங்க, என்ன இருக்கு இதுல?காதலும் கவர்ச்சியும் சினிமாவின் மையப் பொருளா இருந்தப்போ “16 வயதினிலே’ன்னு ஒரு படம் வந்து ஒரு உணர்வை தந்திட்டு போனது. இப்ப படம் பார்த்தாலும் அந்த உணர்வில் உடம்பெல்லாம் சிலிர்க்குது. அப்ப நான் பிறந்திருக்க மாட்டேன்னு நினைக் கிறேன். ஆனா சினிமாவுல அந்தக் கால கட்டம் மட்டும் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். சினிமாவின் வழக்கமான பாடு பொருள்களை உடைச்ச படைப்பாளிகளின் காலம் அது. இப்ப அதே மாதிரி ஒரு படம் எடுத்து இந்தத் தலைமுறைக்கு ஆச்சரியத்தைக் கொடுக் கணும்னு யோசிச்சேன். அப்படி நடந்தா எவ்வளவு பெருமையா இருக்கும்னு நினைச்சுக் கிட்டே இதுல இறங்கி ட்டேன். கிராமத்து சினிமா பட டிரெண்டில் இந்தப் படத்தையும் சேர்த்து எழுதி டாதீங்க. கிராமத்து சினிமா தான் நம்மோட ரூட். ஆனா அதை எல்லோரும் பிடிச்சு ஒரே மாதிரியா படைக்கிறாங்க. “பருத்தி வீரன்’, “சுப்பிரமணியபுரம்’ சாயலில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்கள் வந்திரு க்கும்ன்னு நினைக்கிறேன். ஆனா எதுவுமே பாதிக்கல. என் சினிமா பாதிக்கும்னு நம்பிக்கை இருக்கு. ரொம்ப நம்பிக்கை யோடு பேசுறீங்க, கதையை கொஞ்சம் சொல்லுங் களேன்? பூமியில் இன்னும் ஆதி மனுஷனோட வாழ்வு அற்றுப் போகலை. அதை நம்புகிற மாதிரி நிறைய விஷயங்கள் இங்கு நடந்து கிட்டே இருக்கு. ஆற்றங் கரை நாகரிகம் இந்த நொடி, நிமிஷம் எப்படியோ மாறி நிற்குது. மனுஷ வாழ்வு இப்படி அழிஞ்சு போச்சு. காப்பாது ங்கன்னு யாரும் கூப்பாடு போடலை. முக்கியமா நான் எதையும் போதிக்கல. இந்த வேகமான உலகத்துல இப்படியும் ஒரு மனுஷன் வாழ்றான் பாருங்கன்னு சொல்லியிருக்கேன். பொழுது போக்க வந்தாலும் பொழுது போகாமல் வந்தாலும் நீங்க ஒரு நல்ல சினிமாவை அனுபவிக் கலாம். சில ஆண்டுகளாக மழை இல்லா, வானம் பார்த்த பூமியில் வாழும் சாமானிய மனுஷனின் வாழ்க்கைதான் இந்தப் படம். அவனுக்குள்ளே இருக்குற அன்பு, நேசம், பாசம், கொண்டாட்டம், துக்கம் என எல்லாமே அந்த மண்ணை, மக்களை சார்ந்துதான் இருக்கும். தன்னிடம் இருக்குற எல்லாத்தையும் கொடுத்துட்டு வாழ்ற இந்த “சாமிபுள்ள’ தமிழ் சினிமாவின் முக்கியமான பங்காளி. எல்லோரும் புதியவங்க போலிருக்கு? இந்தப் படத்துக்கு கட்டாயம் இளையராஜா சாரின் இசைதான் ஹீரோவாக இருக்கணும்.  ஆனால் எங்க பட்ஜெட்டுக்கு அவரிடம் நெருங்கவே முடியலை. ஆனால் பொன்னை வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி ஜே.கே.செல்வாவை வெச்சிருக் கோம். படத்துல இளையராஜா சார் இருப்பது போலவே இருக்கும். செந்தில்ன்னு நாயகன். சினிமாவில் முக்கியமான படைப்பாளியாக போராடிக் கொண் டிருப்பவன். அப்படி நடி, இப்படி நடின்னு எதையும் அவனுக்கு சொல்ல வேண்டியதில்லை. எது தேவையோ அதையே செய்வான். கௌசிக், அஷ்மிதா, சீனா எல்லோருக்கும் சினிமா பத்தி நிறைய தெரிந்திருக்கு. வேல்முருகனின் கேமரா. எனக்கும் அவருக்கும் நல்ல ஸ்கோப் இருந்துச்சு.

(நாளேடு ஒன்றில் கண்டெடுத்தது)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: