சிங்கப்பூர் செயற்கைக்கோளை சுமந்துகொண்டு இந்திய ராக்கெட் விரைவில் விண்ணில் பறக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோள் இதுவே ஆகும். இதனை சிங்கப்பூரில் வெளி வரும் “த ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ்” நாளிதழில் செய்திக்கட்டுரையாக வெளி வந்துள்ளது..
“எக்ஸ்-சேட்” என்னும் பெயருடைய அந்த செயற்கைக்கோள் 2007-ம் ஆண்டே விண்ணில் செலுத்த திட்டம் இருந்த்து . ஆனால், அதில் ஏற்பட்ட சில தடங்கல்களால் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்தான் இந்த செயற்கை கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய விருக்கிறது.