Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிலை: இங்கிலாந்தில் . . .

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இவரது உளவு பிரிவு அமைப்பில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளி யாக இருந்தவர்  நூர் இனயத் கான். கானின் தந்தை இந்தியர் மற்றும் அவரது தாய் அமெரிக்கர்.
மாஸ்கோவில் 1914 -ஆம் ஆண்டு பிறந்த இவர், இந்தியா சுதந்திரம் அடை வதற்காக போரிட்டு மடிந்த திப்பு சுல்தானின் மரபு வழியில் வந்தவர். இவர், ஜெர்மன் நாட்டு நாஜி பிரிவினரால் சூழப்பட்ட பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் வானொலி இயக்குநராக செயலாற்றினார்.
இவரது தலைமையிலான ரகசிய உளவாளிகள் தகவல்களை லண்டனுக்கு அனுப்பி வந்தனர். எனவே இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் 1944- ஆம் ஆண்டு ஜெர்மன் படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.
இவரது வாழ்க்கை பற்றிய தகவல்களை சேகரித்து வரும் ஷ்ரபானி பாசு இங்கிலாந்து நாட்டுக்காக வாழ்ந்து மறைந்த கானுக்கு அவர் சிறு வயதில் வளர்ந்த இடமான புளூம்ஸ்பரி என்ற இடத்தில் ஒரு வெண்கல சிலை வைக்க வேண்டும் என வற்புறுத்தி வருகிறார். இதற்காக ஒரு லட்சம் பவுண்டுகள் நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
இவரது முயற்சிக்கு 34 இங்கிலாந்து எம்.பி.க்கள் மற்றும் இங்கிலாந்து வாழ் ஆசியர்களில் பலரும் ஆதரவு தெரிவித்து ள்ளனர்.
(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: