Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.எஸ்.வேர்டில் டெக்ஸ்ட்டாக பவர்பாய்ண்ட் ஸ்லைடு

பொதுவாக பிரசன்டேஷன் மேற்கொள்ள, நாம் வேர்ட் தொகுப்பிற்குப் பதிலாக, பவர்பாய்ண்ட் புரோகிராமினையே விரும்புவோம். ஏனெ ன்றால், பவர்பாய்ண்ட் புரோகிராமில் பிரசன் டேஷன் தயார் செய்வது மிக மிக எளிது. பார்ப் பவர்களும் இதனையே விரும்புவார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், சொல்லப்படும் விஷயங்கள் விரைவாகத் தெரிய வரும். ஆனால் சில வேளைகளில், நாம் வேர்ட் தொகுப்புமூலம் பிரசன்டேஷன் காட்டவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவோம். இந்த சூழ்நிலையில், பவர்பாய்ண்ட் புரோகிராமில் ஸ்லைடுகளை அமைத்து, அதனை வேர்ட் தொகுப்பிற்கு மாற்றிக்கொள்ளும் வசதியினை, பவர்பாய்ண்ட் கொடுக்கிறது.  அதனை இங்கு காணலாம்.

1. பவர்பாய்ண்ட் தொகுப்பின் இடது மேல் பக்கம் “Office” பட்டனில் கிளிக் செய்திடவும்.

2. மெனுவின் இடது பக்கம் உள்ள “Publish” என்பதில் கிளிக் செய்திடவும்.

3. இப்போது காட்டப்படும் மெனுவில் “Create Handouts in Microsoft Office Word” என்பதில் கிளிக் செய்திடவும்.

4. பின்னர், “Send to Microsoft Office Word” என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

5. தரப்படும் பேஜ் லே அவுட் பட்டியலில், வேர்ட் டாகு மெண்ட்டுக்கான லேஅவுட் தேர்ந் தெடுக்கவும்.

6. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள “Add slides to Microsoft Office Word document” என்பதில் “Paste link” அல்லது “Paste” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே பட்டனில் கிளிக் செய்திடவும்.

இனி வேர்ட் 2007 தானாகத் திறக்கப்பட்டு, அதில் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகள் இருப்பதனைக் காணலாம். நீங்கள் “Paste” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைட் அப்படியே வேர்ட் டாகுமெண்ட் ஆக மாறி இருக்கும். “Paste Link” ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், பவர்பாய்ண்ட் ஸ்லைட் போலவே ஒரு டாகுமெண்ட்டாக மாற்றப்பட்டிருக்கும்.

(கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)
ப‌டக்கள் தொகுப்பு – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: