காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டதில், பல்வேறு முறை கேடுகள் குறித்து நடந்து வரும் விசாரணையில் ஆஜராக தயார் என கூறி யிருந்தும், சி.பி.ஐ., யிடமிருந்து எவ்வித தகவலும் வர வில்லை என, போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கூறினார்.
டில்லியில் நடந்த காமன் வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில், பல கோடிக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க் கட்சிகளும் இது தொடர்பாக பிரச்னையை கிளப்பின. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. காமன்வெல்த் போட்டி களுடன் நேரடியாக தொடர்புடைய பலரது வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி வீடும் அடங்கும். இதைத் தொடர்ந்து, கடந்த மாதம், சி.பி.ஐ., அதிகாரிகள், தொலைபேசி மூலம், சுரேஷ் கல்மாடியுடன் தொடர்பு கொண்டு, விசாரணை முன் ஆஜராக வேண்டும் எனக் கூறினர். இதை ஏற்ற சுரேஷ் கல்மாடி, ஜனவரி 3ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு வருவதாகக் கூறினார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சுரேஷ் கல்மாடி கூறுகையில், “இது தொடர்பாக விசாரித்து வரும் அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சி.பி.ஐ.,யிடம் தெரிவித்து விட்டேன். அதற்கு பின், சி.பி.ஐ.,யிடமிருந்து எவ்வித தகவலும் இதுவரை வரவில்லை’ என்றார்.
காமன்வெலத் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் நடந்த நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ., மூன்று எப்.ஐ. ஆர்.,களை பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் சி.பி.ஐ., அதிகாரிகள் காமன்வெலத் போட்டிக்கான அலுவலகத் திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில், சில ஆவணங்களை எடுத்து சென்று ள்ளனர். கட்டுமானப் பணிகள் மேற்கொண்ட நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் இதில் அடங்கியுள்ளன.
(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி)