Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌தவிகளை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் மு.க• அழகிரி

மத்திய மந்திரி அழகிரி தனது மந்திரி பதவியையும், தென் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டதாகவும் ராஜினாமா கடிதங்களை முதல் -அமைச்சர் கருணாநிதி யிடம் கொடுத்து விட்டதாகவும் தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும், கனிமொழி எம்.பி. நடத்தும் சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சியை ரத்து செய்யவேண்டும் என்றும் அழகிரி வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.
தற்போது மதுரையில் இருக்கும் அழகிரி இன்று மாலை உசிலம்பட்டியில் நடைபெறும் சமத்துவபுரம் திறப்பு விழாவில் மு.க. ஸ்டாலின் உடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக மதுரையில் தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆனால், மு.க. அழகிரி ராஜினாமா செய்தியை தி.மு.க. மேலிடம் உறுதி செய்யவில்லை.
(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி)
இதன்பின் வந்த‌ செய்தி அறிய . . (இந்த வரியை கிளிக் செய்க•)

Leave a Reply