Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வனிதாவிடம் மகனை ஒப்படைப்பதற்கு மேலும் இரு வார கால அவகாசம்

நடிகர் ஆகாஷ் வசம் இருக்கும் மகன் விஜய் ஸ்ரீஹரியை வனிதா விடம் ஒப்படைக்க, சென்னை ஐகோர்ட் மேலும் இரண்டு வார கால அவகாசம்  அளித்துள்ளது.

நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷ்க்கும் திருமணம் நடந்தது. இவர் களுக்கு ஒன்பது வயதில் விஜய் ஸ்ரீஹரி எனும் மகன், ஒரு மகள் உள்ளனர். வனிதா-ஆகாஷ்க்கு பரஸ்பர விவாகரத்து ஏற்பட்டது. ஆனந்த ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். தனது மகன் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் பல வந்தமாக கடத்திச் சென்றதாகவும், அவனை ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகை வனிதா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரி பரந்தாமன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச், இரண்டு வாரங்களில் விஜய் ஸ்ரீஹரியை வனிதா வசம் ஆகாஷ் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. கடந்த மாதம் 23ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ஆகாஷ் தாக்கல் செய்த மனு: எனது மகன் விஜய் உடன் கடந்த 27ம் தேதி செகந்திராபாத்துக்கு சென்றேன். செகந்திராபாத் கோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக, எனது வக்கீலை சந்திக்க சென்றோம். சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக, டில்லிக்கு சென்று வக்கீலை சந்திக்க வேண்டியதாகி விட்டது. டில்லி செல்லும் விமானத்தில், விஜய்க்கு இடம் கிடைக்க வில்லை. மேலும், டில்லியில் அதிக குளிர் இருந்தது. பனி மூட்டத்தால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே, அவனது உடல் நிலையை கருத்தில் கொண்டு, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விஜய்யை அனுப்ப முடிவு செய்தேன். அப்போது தற்செயலாக, விஜய் ஸ்ரீஹரியின் தாத்தா விஜயகுமாரை ஐதராபாத்தில் சந்தித்தேன். சென்னையில் இருக்கும் எனது தாயாரிடம் விஜய்யை ஒப்படைக்குமாறு விஜயகுமாரிடம் கேட்டேன்.

சென்னை விமான நிலையத்தில் அவர்கள் இறங்கும் போது, அங்கு மீடியாக்களுடன் வனிதா காத்திருந்தார். விஜய குமாரிடம் இருந்து விஜய்யை பறிக்க முயற்சித்துள்ளனர். அவன் போக மறுத்துள்ளான். விஜய்யை வனிதாவின் கணவர் ஆனந்த ராஜன் தாக்கியுள்ளார். அவனது கழுத்தை அழுத்தி யுள்ளார். விஜய்க்கு ஆபத்தை ஏற்படுத்தி யுள்ளார். அவனை மிரட்டியும் உள்ளார். பின், போலீசார் எனது மகனை மீட்டுள்ளனர். எனது தாயாரிடம் விஜய்யை ஒப்படைத்து ள்ளனர். கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அவன் சிகிச்சைப் பெற்றான்.  வனிதாவின் இரண்டாவது கணவரான ஆனந்த ராஜன், எனது மகனை தாக்கியுள்ளார். வனிதாவும், ஆனந்த ராஜனும் சேர்ந்து எனது மகனை கடத்த முயற்சித் துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வனிதா, ஆனந்த ராஜனுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளேன். கோர்ட் அளித்த இரண்டு வார கால அவகாசம், 5ம் தேதி (இன்று) முடிகிறது. வனிதா உடன் செல்ல எனது மகன் விரும்பவில்லை. ஆனந்த ராஜன் குறித்தும் அவன் பயப் படுகிறான். விமான நிலையத்தில் நடந்த சம்பவம், அவனுக்கு மன உளைச்சலை அளித்துள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் மீள வில்லை. வனிதா வசம் விஜய் ஸ்ரீஹரியை ஒப்படைக்க, எட்டு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்முன் விசாரணைக்கு வந்தது. ஆகாஷ் சார்பில் சீனியர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். நீதிபதிகள் முன் வனிதா ஆஜராகி, “மனுவில் கூறிய குற்றச் சாட்டுக்களை மறுக்கிறேன். கோர்ட் அளித்த இரண்டு வார அவகாசம் முடிகிறது. விஜய்யை ஒப்படைக்க கால தாமதம் செய்கின்றனர். நேற்று கூட பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது என்றார்.

உடனே நீதிபதி தர்மாராவ், “விமான நிலையத்தில் என்ன நடந்தது? அங்கு மீடியாவை யார் கூட்டி வந்தது? கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது, உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்கிறீர்கள். தாத்தாவிடம் குழந்தை அடைக்கலம் தேடுகிறது. அவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்றார்.

இதையடுத்து, மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யவும், விஜய் ஸ்ரீஹரியை ஒப்படைக்க மேலும் இரண்டு வார காலம் நீட்டித்தும், “டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: