இதன் முந்தைய தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க)
11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது.
12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது.
13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு மெதுவாக (Slow) ஆரம்பித்து முடிக்கும்போது Fast Running-ல் முடிக்க வேண்டும். நீங்கள் சரியாக ஓடியிருந்தால் உங்களுடைய வயிற்றுப்பகுதி லேசாக வலியும், வயிறு உள்வாங்கல் இருக்கும். இந்த பயிற்சியில் தொடர்ந்து 3 மாத காலம் ஈடுபட்டால் உடல் எடையும், தொப்பையும் 100% கண்டிப்பாக குறையும். இதற்கு அளவான சாப்பாடு தேவையில்லை.
14. ஒரு உடற்பயிற்சி ஒரு பகுதிக்கு செய்யும்போது அந்த பகுதியில் பயிற்சி முடியும் வரை இடையிடையே அதிக ஓய்வு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
15. பயிற்சியில் ஈடுபடுபவர்கள் முக்கியமாக Competition-ல் ஈடுபடுபவர்கள் கெட்ட போதை, ஆல்கஹால், மற்றும் லிக்கோடின் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், உங்கள் உடலில் உள்ள Energy (தெம்பு) குறைந்துவிடும்.
16. பயிற்சியில் ஈடுபட்டு பயிற்சி முடிந்தவுடன் உங்கள் மூச்சு சுவாசிப்பு வேகமாக செயல்படும்போது, உங்கள் சுவாசிப்பை மூக்கால் மட்டுமே சுவாசிக்க முயற்சி செய்யவும். மூச்சை வேகமாக சுவாசிப்பது உடலுக்கு ஆரோக்கியம் அல்ல•
R. YUVARAJ
Gym Fitness Consultant, Real Estate, Plot Promoters, Finance Arrangement
Cell: 98418 96087
உங்கள் பதிவுகள் அனைத்தும் நலம்