Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குடும்ப நல கோர்ட்டில் இன்று ஆஜர்: நடிகை வனிதா பரபரப்பு புகார்; “குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர்”

நடிகை வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷீக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை தங்கள் வசம் ஒப்படைக்க இருவரும் வற்புறுத்தி வருகின்றனர். குழந்தை வனிதா வசம் இருக்க கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் குடும்ப நல கோர்ட்டில் குழந்தை தன்வசம் இருக்க உத்தரவிடக்கோரி ஆகாஷ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வனிதாவும் ஆகாஷீம் கோர்ட்டில் ஆஜரானார்கள். ஆகாஷ் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஐகோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் வனிதாவும் ஆனந்தராஜூம் விமான நிலையத்தில் நடந்து கொண்டு உள்ளனர். விஜய் ஸ்ரீஹரிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளேன். இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன். விஜய் ஸ்ரீஹரி 2 வாரம் என்னுடன் இருக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி வனிதாவுக்கு நீதிபதி உத்தர விட்டார். விசாரணையை 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.   பின்னர் வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

குழந்தை விஜய் ஸ்ரீஹரியை பார்க்கவிடாமல் தடுக்கின்றனர். குழந்தை கழுத்தை நான் நெரித்ததாக சொல்வது அபாண்டம். எந்த தாயாவது குழந்தையிடம் அப்படி நடப்பாளா? இவ்வாறு அவர் கூறினார்.

நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி

One Comment

  • Hello there, I actually love your current site. Now this is certainly a superb posting. I look forward to browsing more interesting subjects that you’ll turn out to be writing within the forthcoming. I have realized a bunch from this. I am grateful.

Leave a Reply