ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி பல ஆண்டுகளாக போராடி வருகிறது. தனி
மாநிலம் அமைப்பது பற்றிய ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கை விவரம் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் தெலுங்கானா கட்சி தலைவர் சந்திரசேகரராவ் நிருபர் களிடம் கூறியதாவது:-
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை கால தாமதப்படுத்தத்தான் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. அந்த அறிக்கை விவரத்தை வெளியிடுவதை கூட இழுத்தடிக்கிறார்கள். எங்களைப் பொறுத்த வரையில் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி கவலை இல்லை. இன்னும் 20 நாளில் தெலுங்கானா தராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களை ஸ்தம்பிக்க செய்வோம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா மனது வைத்தால் தனி மாநிலம் கிடைத்து விடும். அவர் தெலுங்கானா தர ஒப்புக்கொண்டால் அவரது பாதத்திற்கு பாலாபிஷேகம் செய்யத் தயார். இவ்வாறு அவர் கூறினார்.
(கண்டெடுத்த செய்தி)