ப.சிதம்பரம் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை வெளியிட்டார். அனைத்து பிரதிநிதிகளிடமும் அறிக்கை நகல் வழங்கப்பட்டது. அறிக்கையில்
எந்த உறுதியான தீர்வும் சொல்லப் படவில்லை. ஆனால் தெலுங் கானா பிரச்சினைக்கு தீர்வுகாண 6 ஆலோசனைகளை வழங்கி இருந்தது. அதன் விவரம் வருமாறு:-
1. தற்போதுள்ள ஆந்திர மாநிலம் நீடிக்க வேண்டும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகளை உருவாக்கி, அதில் ஒன்றை தெலுங்கானா பகுதிக்கு வழங்கலாம்.
2. தனியாக ஒரு கழகத்தினை அமைத்து, தெலுங்கானா பகுதி வளர்ச்சிக்கு செயல்படுத்தலாம்.
3. இரு மாநிலமாக பிரிக்கப்பட்டால், ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். 2 மாநிலங்களுக்கும் ஐதராபாத்தே தலைநகரமாக இருக்க வேண்டும்.
4. இரு மாநிலமாக பிரித்தால் ராயலசீமா பகுதியையும், தெலுங்கானாவுடன் இணைத்து ராயல தெலுங்கானா, கடலோர ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்கலாம்.
5. ஐதராபாத்தையும், ராயல தெலுங்கானா மாநிலத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
6. 1956-க்கு முன்பு இருந்தது போல ஐதராபாத்தையும் தெலுங்கானாவுடன் உள்ளடக்கி தெலுங்கானா மாநிலம், சீம ஆந்திரா என 2 மாநிலமாக பிரிக்கலாம்.
ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கையில் மேற்கண்ட ஆறு ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளதாக ப• சிதம்பரம் தெரிவித்தார்.
இதன் தொடர்பாக (ஆங்கிலத்தில் அறிய) வீடியோ (இந்த வரியினை கிளிக் செய்க)