Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உணவே மருந்து, மருந்தே உணவு

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது சித்த மருத்துவம். எனவே தான், பெரும்பாலான சித்த மருந்துகள், உணவாக உட்கொள்ளும் படியே கசாயம், அடை, புட்டு, பொடி, லேகியம், மணப்பாகு, நெய், எண்ணெய் போன்ற வடிவங்களில் காணப் படுகின்றன. உணவாக பயன்படும் ஒரு பொருளை, குறைந் தளவில் பக்குவப் படுத்தி சாப்பிடும் போது அது மருந் தாகவும், அதே பொருள் அளவுக்கு மிஞ்சி சாப்பிடும் போது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. ஒரு பொருளின் உள்ளேயே சத்துகுணம் என்னும் மருத்துவ தன்மையும், ராஜ குணம் என்னும் உணவுத்தன்மையும், தாமச குணம் என்னும் நச்சுத் தன்மையும் நிரம்பியுள்ளது. ஆகவேதான், அனுபவத்தின்படியும் அறிவியல் கருத்துகளின்படியும் உணவை மருந்தாக மாற்றிக் கொள்கிறோம். மருந்து என்பது ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும் தன்மையுடனும் அதை உட்கொள்ளும் போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாததாகவும், அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும். இதுவே மருந்தின் இலக்கணம். ஆனால், நாம் உட்கொள்ளும் பெரும்பாலான மருந்துகள் இவ்வாறு இருப்பதில்லை. கிடைப்பதற்கு அரிதான அல்லது விலை மதிப்புள்ள உணவுகளில் பல்வேறுவகையான ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றை அன்றாடம் சாப்பிட முடியா விட்டாலும், அவ்வப்போதாவது சாப்பிட்டுவந்தால் பல்வேறு வகையான மருத்துவ பலன்களை பெறலாம். பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியதுடன் பெருமளவு மக்களால் விரும்பி உட் கொள்ளப்படும் அற்புத பழம்தான் நோனி. நோனி பழச்சாறாகவும், நோனி பொடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பழங்களில் கரிநீரகங்களும், நார்ச்சத்தும் ஏராளமாக காணப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகளும், பிளேவனாய்டுகள், ஸ்கோபோ லெட்டின், டம்னகாந்தல், இரிடாய்டுகள் போன்ற தாவர வேதிச் சத்துக்களும் ஏராளமாக காணப்படுகிறது. இவை மார்பக புற்று நோய் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளை கட்டுப்படுத்துவதாக ஆரம்ப கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோனி பழச்சாற்றை உட் கொண்டு வர, மாதவிலக்கு கோளாறுகள், வயிற்று உபாதைகள், நாட்பட்ட சளியில் தோன்றும் தொண்டை அழற்சி ஆகியவை நீங்கும். பழச்சாறு மட்டுமின்றி, நோனிப்பட்டையிலுள்ள அலிசாரின் மற்றும் கிளைக் கோசைடுகள் மூட்டுவாதத்தில் தோன்றும் வீக்கம் மற்றும் தூக்க மின்மையை நீக்கி, புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. இதன் பட்டையிலுள்ள ரூபிக்குளோரிக் அமிலம் குடற்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளின் தேவையற்ற வளர்ச்சியை நீக்குகின்றன.

(கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: