சென்னை, திருவல்லில்கேணி, திருவல்லில்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மிஷினில் இன்று காலை பணம் எடுப் பதற்காக வாடிக்கையாளர்கள்
சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடந்தது.

இது குறித்து திருவல்லிக் கேணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனடி யாக போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது நேற்று இரவு கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து இருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கணினிதிரையை உடைத்த போது அது தீப்பிடித்து எரிந்து உள்ளது.
இதனால் பயந்து போன கொள்ளையர் கள் அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளனர். ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே காவலாளி இல்லை. கண் காணிப்பு காமிரா மட்டும் பொருத்தப் பட்டுள்ளது.
இதில் பதிவான காட்சிகளை போட்டுப் பார்த்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரங்களை குறி வைத்து கொள்ளையர் கள் கைவரிசை காட்டுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
(கண்டெடுத்த செய்தி)