Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக சட்டசபை: ஆட்சிக்கு கவர்னர் புகழாரம்: கருப்பு சட்டையுடன் வந்த . . .

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை இன்று காலையில் கவர்னர் உரையுடன் துவங்கியது. கவர்னர் சுர்ஜீத்சிங் பர்னாலா உரையாற்றினார். இன்றைய சபையில் கலந்து கொள்ள வந்த அதிமுக, மதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் கருப்புச் சட்டையுடன் வந்தனர். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி எம்.எல். ஏ.,க்கள் பாதுகாவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இடது சாரி உறுப்பினர்கள் கருப்புத் துண்டு அணிந்து வந்தனர்.

தேர்தல் நெருங்கி வருவதால் இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் , ஆளும் அரசுமீது குற்றம் சுமத்த தயாராக உள்ளது. ஆளும் கட்சியை பொறுத்த வரை தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை கவரும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று சபை கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுந்து கண்டனம் தெரிவித்தனர். விலைவாசி உயர்வு , ஸ்பெகட்ரம் விவகாரம், மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஆகியவற்றை வலியுறுத்தி கண்டித்து பேசினர். ஆனால் கவர்னர் இதனை பொருட் படுத்தாமல் தனது உரையை துவக்கினார்.

எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு : தொடர்ந்து எதிர்கட்சியினர் இடையூறு செய்து கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர். இதனையடுத்து சபாநாயகர் ஆவடையபப்பன் சபை கட்டுப்பாட்டை மீறி செயல்படும் எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து சபைக்காவலர்கள் வரவழைக்க ப்பட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., மார்க்.,கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., மதிமுக, உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நேரத்தில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்.சபை காவலருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து வெளியேறிய எம்.எல்.ஏ.,க்கள் நிருபர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, மின்தட்டுப்பாடு, போக்குவரத்து கழகம் முடக்கம், உள்ளிட்ட இந்த நேரத்தில் கவர்னர் உரை தேவையா என சபையில் கேள்வி எழுப்பினோம். ஆனால் சபை காவலர்கள் எங்களை வெளியேற்றி விட்டனர் என்றனர்.

ஆட்சிக்கு கவர்னர் புகழாரம்: கவர்னர் சுர்ஜீத்சிங் பர்னாலா பேசுகையில்; தமிழகத்தில் திராவிடப்பண்பாட்டை கட்டிக்காத்து அயராது பாடுபட்டு 5 வது முறையாக முதல்வரை பாராட்டு கிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாடும் தைத் திங்களை தமிழ் ஆண்டின் முதல் நாளாக கொண்டாட அறிவித்து ‌தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நாளில் மக்களுக்கு அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் கொண்ட பொங்கல்பை வழங்கி சிறப்பித்திருக்கிறார். தமிழ்செம்மொழி மாநாடு நடததி, தமிழின் பெருமையை உயர்த்தி, தமிழ் வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார். இதில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரி‌மை வழங்குவது பாராட்டுக்குரியது. செம் மொழிப்பூங்கா அமைக்கப்பட்டது. தாவரங்களை பாதுகாக்கும் மர பணுபூங்கா திட்டம், தஞ்சை ஆயிரமாவது விழா கொண்டாடப்பட்டது.

பயிர்க்கடன் வழங்குவதில் சாதனை: இந்தியாவிலயே தமிழகத்தில் தான் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கும் திட்டம் உள்ளது. இதன் மூலம் விவசாய உற்பத்தி பெருகியிருக்கிறது. புதிய சட்டசபை கட்டி பிரதமர் மன்மோகன்சிங் மூலம் திறந்து வைத்தது பெருமைப்பட வேண்டிய விஷயம் , சென்னையில் நூல்கம், அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் தமிழகத்தில் பல அரசு கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இது போன்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தொடர்ந்து பணியாற்றி வருகிறது இந்த அரசு . மின் உறபத்தி உயர்த்தப் பட்டுள்ளது. நீண்ட கால திட்டம் என்பதால் பல திட்டங்களை துவங்கி பல பணிகள் நடந்து வருகிறது. ‌வட சென்னை, மேட்டூரில், தூத்துக் குடியில் அனல்மி்ன் திட்டம் நடந்து வருகிறது. இதன் மூலம் பல மெகா வாட் மின்சாரம் உற்பத்தி கிடைக்கும்.

கிருஷ்ணகிரியில் வேளாண்பல்கலை., : தஞ்சை , திருவாரூர், கடலூரில் வெள்ள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப் பட விருக்கிறது. கிருஷ்ணகிரியில் வேளாண்பல்கல்கலை துவக்கப் படும், கன்னியாகுமரியில் இந்தியமருத்துவம், ‌ஹோமியோபதி பல்கலை., துவக்கப்படும். வெளிநாடுவாழ் தமிழகள் நலன் காத்திட தனி வாரியம் அமைக்கப்படவிருக்கிறது. இலங்கை தமிழர் நலன் காத்திட மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துகிறோம்.

புதிய மருத்துவக்கல்லூரிகள் : ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூரில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் தாயகம், மரு்த்துவம் கல்விக் கடன் வழங்கப்பட்டது. பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு கல்விச்செலவு அரசு மூலம் ஏற்கப்படும் திட்டம் பாராட்டுக்குரியது. காஞ்சிபுரம், தூத்துக்குடி தர்மபுரி, விருதுநகர் மாவட்டத்தில் கலைக்கல்லூரி வழங்கப்படும். நாகையில் விவசாய கல்லூரி் துவங்கப்படும்,

உயிர்காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கலைஞர்காப்பீட்டு திட்டம்: இந்த திட்டம் நாட்டுக்கு வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் ஆகும். இதில் 1.34 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 754 பேர் பலன் அடைந்துள்ளனர். ஒரு ரூபாய் அரிசி வழங்கும் திட்டம் மூலம் உணவு பாதுகாப்பு பேணிக் காக்கப்படுகிறது. நியாய விலை கடைகளில் வழங்கும் இலவசம் மூலம ஏழை மக்கள் விலைவாசி உயர்வில் இருந்து காப்பாற்றப் படுகின்றனர்.

மாற்றுதிறனாளிகள் காக்கும் வகையில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சலுகைள் குறித்து வழிகாட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென ஒரு தனி துறை செயல்படுத்தப்பட்டு முதல்வர் கவனித்து வருவது பாராட்டுக்கு ரியதாகும்.

குடிசைகள் இல்லாத நகரம்: தமிழகத்தில் குடிசைகள் இல்லாத நகரமாக்கிட கலைஞர் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 3 லட்சம் வீடுகள் கட்டி வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதுபோல இன்னும் 3 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும். சலுகை விலையில் வீட்டுமனனைகள் வழங்க திட்டம் செயல்படுத்தப்படும்.

வளர்ந்து வரும் நகரங்களின் புறநகர் பகுதிகளின் வளர்ச்சி பணிக்கு 15 ஆயிரம் கோடி தேவைப்படும் என்றும் இதற்கு சர்வதேச வங்கி மூலம் நிதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது. அறியவில் அரங்கில் தமிழகம் சிறப்பு குறித்து பிரதமர் பேச்சை நினைவு கூர்ந்தார். இது நமக்கு கிடைத்த பாராட்டு ஆகும். அண்ணா பல்கலை., அறிவியல் நகரம் அமைக்கப்பட விருக்கிறது. படித்து வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி தொகை வழங்கி யிருக்கிறது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணிகள் வழங்கப் பட்டுள்ளன. தேசிய ஊரக நல்வாழ்வு திட்டத்திற்கு முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. இறப்பு விகிதம் பேறுகால இறப்பு குறைந்திருக்கிறது,

சபாநாயகர் ஆவடையப்பன் தமிழில் மொழிபெயர்த்து பேசினார். கவர்னர் உரை முடிந்ததும், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபை எத்தனை நாள் நடத்தலாம், என்ன விவாதங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும். ஒருவார காலம் நடக்கும் இந்த கூட்டத்திற்கு பின்னர் வரும் பிப். 4 ம்தேதி மீண்டும் சபை கூடுகிறது. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: