ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி அறிந்ததும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் ஆவேசம் அடைந்தார். அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்கானா தனி மாநிலம் தர வேண்டும் என்பது தான் எங்களது நீண்டநாள் கோரிக்கை. இதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். கிருஷ்ணா கமிட்டி போன்ற அறிக்கையை நான் இதுவரை பார்த்ததில்லை. எதற்கும் பயன்படாத, தெளி வில்லாத அறிக்கை. அதில் தெலுங்கானா அமைக்கலாமா? வேண்டாமா? என்பதற்கு பதில் இல்லை. 6 பரிந்துரைகளை வெளியிட்டு மேலும் குழப்பம் விளைவிக்க முயற்சித்துள்ளார்.
தனி மாநிலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அந்த நம்பிக்கை வீன் போய் விட்டது. தனி மாநிலம் கோரி தெலுங்கானாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.- எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதன் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கலாம். நான் முன்பே கூறியது போல் இனி வரும் நாட்களில் எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். அரசு அலுவலகங்களை இயங்க விடாமல் முடக்கிவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி
இதன் தொடர்பான செய்தி மற்றும் வீடியோ (இந்த வரியை கிளிக் செய்க)