Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி: நித்யானந்தா ஆபாச வீடியோவால் தற்கொலைக்கு . . .

நித்யானந்தா ஆபாச வீடியோவால் தற்கொலைக்கு முயன்றேன் என்று ரஞ்சிதா கூறினார். நடிகை ரஞ்சிதா தனியார் டி.வி. சேனலுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது: எனக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அமைதி இல்லாமல் தவித்தேன். என் கஷ்டத்தை பார்த்த நண்பர்கள் நித்யானந்தா பற்றி சொன்னார்கள்.
அவர் ஆசி பெற்றால் கவலைகள் தீரும் என்றார்கள். நண்பர்கள் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போய் அவரை சந்தித்தேன். அதன் பிறகு கவலைகள் விலகியது. நித்யானந்தாவால் மன ஆறுதல் பெற்றேன். ஆசிரமம் பிடித்து போனது. மடத்தில் இருந்தவர்களும் பிடித்துப் போனார்கள்.
அன்றுமுதல் நித்யான ந்தாவின் பக்தையாக மாறி னேன். சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவும், நானும் ஆபாசமாக இருப்பது போல் டி.வி.யில் வீடியோ படம் வெளியானது. அதை பார்த்ததும் அதிர்ச்சியானேன். அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் அல்ல. இந்த வீடியோ வெளியாக காரணம் என்ன என்று யோசித்தேன்.
நித்யானந்தாவை பழிவாங்க என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி இருப்பது புரிந்தது. சில சேனல்கள் தங்களின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்திக் கொள்ள அந்த வீடியோபடத்தை போட்டி போட்டு ஒளிபரப்பின. நான் அவமானப்படுத்தப்பட்டேன். சினிமாவில் பலகால மாக நடித்து “புகழ்”, “இமேஜ்” போன்ற வற்றை சேர்த்து வைத்தேன்.
அவை அனைத்தையும் ஒரே நாளில் இழந்தேன். ஒருகட்டத்தில் தற்கொலை முடிவுக்கு கூடபோனேன். அப்படி நான் செத்து போய் இருந்தால் என் தரப்பு நியாயங்களை சொல்ல முடியாமல் போய் இருக்கும்.  எனக்காக பேசயாரும் இருந்திருக்க மாட்டார்கள்.
வீடியோபடத்தை வெளியிட்ட லெனின் கருப்பன் சரியான ஆள் இல்லை. அவர் என்னை ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். அப்போது அவர் மீது நான் புகார் எதுவும் அளிக்க வில்லை. ஆசிரமத்தின் பெயர் கெட்டு விடும் என அமைதியாக இருந்தேன்.
இப்போது ஆசிரமத்துக்கு எதிராகவே லெனின் கருப்பன் செயல்பட தொடங்கியுள்ளதால் அவரைப் பற்றிய விஷயங்களை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சட்டத் தையும் நீதி மன்றத்தையும் முழுமையாக நம்புகிறேன்.
எனக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும். சினிமாவை விட்டு நானாக விலகமாட்டேன். கடந்த சில மாதங்களாகவே நான் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன். இப்போது நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன். சிக்கலான நேரத்தில் என் கணவரும், குடும்பத்தினரும் ஆறுதலாக இருந்து எனக்கு தைரியம் கொடுத்தனர்.
நான் நடிகை என்னைப் பற்றி எது வேண்டு மானாலும் எழுதட்டும். ஆனால் என் கணவர் இதில் சம்பந்தப் படாதவர். அவர் ராணுவ த்தில் மரியாதையான பொறுப்பில் இருக்கிறார். அவரை ஏன் இந்த விஷயத்தில் இழுத்தார்கள் என்று புரிய வில்லை.  ஆபாச சி.டி. வெளியான போது நான் அமெரிக்காவில் சகோதரி வீட்டில் இருந்தேன்.

எனக்கு பலதரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்தன. பயமுறுத்தப் பட்டேன். தனியொரு பெண்ணால் அவற்றை சமாளிக்க முடிய வில்லை. எனவே தான் அமெரிக்காவிலேயே இருந்து விட்டேன். மீடியாவை சந்திக்காமல் இருந்தால் நான் தலை மறைவாகி விட்டதாக கருதக்கூடும். எனவே தான் நடந்த விஷயங்கள் பற்றி இப்போது பேட்டி அளிக்கிறேன். தொடர்ந்து என் தரப்பு நியாயங்களை சொல்லிக் கொண்டே இருப்பேன். இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: