Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெல்லு: திரைவிமர்சனம்

தஞ்சாவூரில் உள்ள கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி படு கொலை செய்த உண்மை சம்பவம் தான் படத்தின் மையக்கரு.
.
கிராமத்து பண்ணையார், தனது வயலில் வேலை செய்யும் தொழிலாள ர்கள் அத்தனைபேரையும் அடிமையைவிட கேவலமாக பிழிந் தெடுக்கிறார். அந்த  ஊர்த் தலைவரும் இப்படத்தின் நாயகன் சத்யாவும் சேர்ந்து அந்த பண்ணை யாரை எதிர்க்கிறார்கள். கிராமத் தில் பிழைப்புக்காக‌ வரும் பாக்யா ஞ்சிலி என்ற பெண்ணுக்கும் படத்தின் கதாநாயகனான சத்யாவுக்கும் இடையே காதல் துளிர்விடுகிறது.  தொழி லாளர்கள் கூலி உயர்வுக்காக செய்யும் போராட்டத்தை கண்டு அரசு அதை ஏற்றுக்கொள்கிறது.. அதேசமயம் அந்த கிராமத்து பண்ணையார், கூலியை உயர்த்திக் கொடுக்காமல் இருக்க சூழ்ச்சி வலைகளை பின்னுகிறார். தொழிலாளர்களை பழி தீர்க்கவும் திட்டம் தீட்டுகிறார். தொழிலாள ர்களும் அவருக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் தயாராகிறார்கள். இரு தரப்பு மோதலில் நடக்கும் அதி பயங்கர காட்சியே படத்தின் திருப்புமுனை எனலாம்.

ஒரு கிராமத்தையே நமது கண்முன் காட்டியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. அங்கு வயலில் மக்களின் வாழும் வாழ்க்கைப் போராட்டம் தத்ரூபமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சாதிச் சண்டைகளையும். முதலாளி களின் கொடுங் கோல்தனத்தையும் விறுவிறுப்பு குறையாமல் காட்டியிருக் கிறார்கள்.

நெல்லு – விரைவில் அறுவடையாகும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: