Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? – அதிரடி சோதனை நடத்த . . .

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? என கண்டறிய நாடு முழுவதும் குடோன் களில் அதிரடி சோதனை நடத்தப் பட்டது.   நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இன்று ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.
வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்துக்கான வரியை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பல டன் வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. இருந்தும் வெங்காயத்தின் விலை குறைந்த பாடில்லை.
வியாபாரிகள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி அமைத்து கொண்டு வெங்காய விலையை குறைக்காமல் ஏற்றி வருவதாக இந்திய வியாபார போட்டி ஆணையத்துக்கு (சி.பி.ஐ.) தகவல் கிடைத் துள்ளது. எனவே, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசார ணையில் பெரு நகரங்களில் உள்ள வியாபாரிகள் குடோன்களில் வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.  எனவே, பெருநகரங்களில் உள்ள வெங்காய குடோன்களில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனை கொல்கத்தா, சூரத், வாரணாசி, கான்பூர் மற்றும் நாட்டின் பெரும் பாலான நகரங்களில் ஒரே நேரத்தில் நடை பெற்று வருகிறது. இச்சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டால் விலை குறைய வாய்ப்பு உள்ளது

(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: