Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆங்கிலம் கற்க அச்சம் ஏன்?

தமிழகத்தில் இன்று எத்த னையோ இடங்களில், எத்தனையோ மையங்கள் “”எளிதில் ஆங்கிலம் பேசலாம்” என்று கூறி பல வகைகளில் பணத்தை பெருக்கி கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மை என்ன வென்றால் ஆங்கிலம் கற்பதற்காக அதிகப் பணம் செலுத்தி படிக்க வேண்டிய தில்லை. சில வழி முறைகளை பின்பற்றினால் போதுமானது. அவற்றில் சில வற்றை பார்ப்போம்.

முதலில் ஆங்கிலச் செய்தித் தாள் களை வாசிப்பது அவசியம். ஆங்கிலச் செய்திகள் புரியவில்லை என்றாலும், அதனை தொடர்ந்து வாசிக்க வேண்டும். வாசிக்கும்போது அதில் வரும் புதிய வார்த்தைகளை சேகரித்து அந்த வார்த்தைகளுக்கான பொருளை அகராதியின் உதவியோடு கண்டறிந்து அவ்வார்த்தைகளை நாம் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அதேபோல, ஆங்கிலமா? ஐயோ பயம் என்று விலகிச் செல்லாமல், ஆங்கிலம் தானே என எளிதாய் எடுத்துக் கொண்டு ஆங்கிலத் திலே பேச முயற்சிக்க வேண்டும். யாரும் உடனே சரளமாக பேச முடியாது. ஒரு குழந்தை கூட முதலில் தட்டுத் தடுமாறி பலமுறை விழுந்து, எழுந்துதான் சரியாக நடக்கிறது. ஆங்கிலம் கற்பது அப்படித்தான். ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படும் தவறுகளைப் பற்றித் தயங்காமல், நன்கு ஆங்கிலம் அறிந்த நபரிடம் சென்று அவரிடம் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும். அப்போது சரியாகப் பேசும் அவரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம்.  மேலும், வானொலியிலும், தொலைக்காட்சி யிலும் ஒளிப்பரப்படும் செய்தி களுக்கு செவிமடுத்து அதில் வரும் ஆங்கில உச்சரிப்புகளை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சில நேரங்களில் தனியாக இருக்கும் போதோ, அல்லது நண்பர்களோடு உரையாடும்போதோ ஆங்கில உச்சரிப்புகளைச் பயன்படுத்துங்கள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கு கதைகள் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பகுதியாகும். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வாசிக்கும் அனைவரும் தொடக்கத்தில் சிறுகதை களை ஆங்கிலத்தில் வாசித்து, அதே கதையை தன்னுடைய சொந்த நடையில் மற்றவரிடம் ஆங்கிலத்திலே சொல்ல முயற்சிக்க வேண்டும். கதைகள் மூலம் ஆங்கிலம் கற்பது ஒரு வகையில் ஆர்வத்தைத் தூண்டி நம்மை அதிக ஈடுபாட்டோடுகற்க வழி வகுக்கும். தான் அறிந்தவற்றை ஆங்கிலத்திலே எழுதிப்பழகவும் முயற்சிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் உள்ள சிறிய புத்தகங்களை வாசித்து அதிலிருந்தும் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆங்கிலம் கற்க முடிவு செய்த பிறகு முடிந்த அளவிற்கு தமிழில் பேசாமல், தவறாக பேசினாலும் ஆங்கிலத்திலேயே பேச முயற்சி செய்ய வேண்டும். மேலும், ஆங்கிலத்திலேயே எண்ண வேண்டிய அவசியமும் உள்ளது. நடக்கும் நிகழ்வு களைப் பற்றியும், பார்க்கும் நபர்களைப் பற்றியும், பார்க்கும் பொருட்களைப் பற்றியும் ஆங்கிலத்தி லேயே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்று பல்வேறு வகையான அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சிகள் விரைந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும் சூழல். இவற்றை தெரிந்துக் கொள்ள ஆங்கிலப்புலமை மிகவும் அவசியமாகிறது.
வார்த்தைகளின் முக்கியத்துவம்

வார்த்தைகள் இன்றி வாய் மட்டும் அசைத்தால் காற்று மட்டும்தான் வரும் என்பது உலகறிந்த உண்மை. எந்த ஒரு மொழியைக் கற்றாலும் முதலில் வார்த்தைகள் தேவை. நல்லமுறையில் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கும் போது, ஆங்கில வார்த்தைகள் அதிகம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒவ்வொருநாளும் புதிய ஆங்கில வார்த்தைகளை கண்டறிந்து அதன் பொருளையும் தெளிவாகக் தெரிந்து, பயன்படுத்த வேண்டும். வார்த்தைகளை வளப்படுத்த அரிய கருவி முன்னரே  கூறியது போல செய்தித்தாள்களையும், சிறுகதை நூல்களையும், நாம் சின்ன வயதில் புரியாமல் படித்த ஆங்கில நூல்களையும் வாசித்து பலன் பெறுவது தான். மேலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள ஒரு படைப்பை (உதாரணத்திற்கு திருக்குறள்) நன்கு கவனமுடன் வாசித்தால் அதிக ஆங்கில வார்த்தை களை தெரிந்து கொள்ளலாம். சொந்த வாழ்விலே நடக்கின்ற நிகழ்வுகளில் பயன்படும் வார்த்தை களுக்கான ஆங்கில வார்த்தைகளை அகராதியின் துணையுடன் கண்டறிந்து, ஆங்கில வார்த்தைகளை நம் மனதிலே பதித்திட வேண்டும். வார்த்தைகளைக் கவனமுடன் கற்கும்போது, பேச விளையும் எவருக்கும் வார்த்தைகள் சரளமாய் வரும்.
இலக்கணம் மிக முக்கியம்
எந்த மொழியிலும் தடையின்றி தொடர்பு கொள்ள வார்த்தைகள் கற்றால் மட்டும் போதாது. அவற்றை முறையாகப் பயன்படுத்தும் இலக்கண விதிகளை கற்க வேண்டும். பல பள்ளிகளிலும் நடைமுறையில் இருப்பது போல, செயல் வழிக்கல்வி மூலம் இலக்கணத்தை எளிதில் கற்கலாம். தேவையற்ற விளையாட்டுகளிலே நேரத்தை கழிப்பதற்குப் பதிலாக, ஒரு சில மொழி சார்ந்த விளையாட்டுகளிலே நேரம் செலவிட்டால் கற்பது எளிதாகும். ஆங்கில இலக்கணங்களை நன்கு அறிந்து கொண்டால் மிகவும் எளிதாகப் பேச ஆரம்பிக்கலாம்.
நடந்த நிகழ்வுகளை, அனுபவங்களை, உரையாடல்களை சரியான இலக்கண நடையில் பேசிப் பழக வேண்டும். செயல் களை செய்துவிட்டு அந்த செயல்களைச் சரியான இலக்கண நடையில் யார் சொல்ல முடியும் என்று நண்பர்களுக்குள் சிறு போட்டிகள்நடத்தலாம். நாம் வாசிக்கும்,கேட்கும்,ஆங்கில உரையாடல்களில் உள்ள சரியான இலக்கண நடையை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
எழுத்தும் பேச்சும்
வார்த்தைகளைக் கற்று, இலக்கண நடையையும் சிறப்பாக அறிந்த பின்பு நல்ல முறையில் பேசலாம் எழுதலாம். நம் வாழ்விலே நடக்கும் சொந்த அனுபவங்களைப் பற்றி சிறிய அளவில் எழுதி, நன்கு ஆங்கிலம் அறிந்த ஒருவரிடம் அதைச் சரி செய்யும்படி கேட்டு, அந்த தவறுகளைத் திருத்தி பிறரோடு சப்தமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். சிறு வகுப்புகளில் நாம் கற்ற ஆங்கிலப் பாடல்களைப் பாடி, அங்கே நாம் அறிந்த கதைகளை நம் பாணியில் ஆங்கிலத்தில் எழுதி, மற்றவர்களிடம் சொல்ல முயற்சிக்க வேண்டும். உதாரணத்திற்கு, பாட்டி வடை சுட்ட கதையை, நமது சொந்த நடையில் எழுதி, தவறுகளைத் திருத்தி பேசிப் பார்த்தல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு துறை பிடித்திருக்கும். தனக்குப் பிடித்த தலைப்பை தேர்ந்தெடுத்து அதன்படி கொஞ்சம் கொஞ்சமாய் எழுதிப் பழகி, எழுதியவற்றை பிறரோடு பேசிப்பழகி, நமது ஆங்கிலப் பேச்சுத் திறமையையும் எழுத்துத் திறமை யையும் வளர்த்துக் கொள்ள லாம்.
ஆங்கிலம் அறிந்த நபர்களைக் கண்டறிந்து ஆங்கிலத்திலே தொடர்ந்து உரையாடுவதும், அவர்களிடம் தங்களின்  படைப்பினை பகிர்ந்து கொள்வதும் நமக்கு உந்து சக்தியாக அமையும். ஏதேனும் ஒரு படத்தையோ, பொருளையோ,  பார்த்து அதை நமது நடையில் விளக்கும் போது நமக்கு அனுபவம் கிடைக்கும். மேலும் நாம் பல புதியவற்றை கற்றுக் கொள்ளலாம். ஆக முயற்சியும் பயிற்சி யுமிருந்தால் ஆங்கிலம் கற்பது மிக மிக எளிது.
(தைரியம் நக்கீரன் இதழில் எழுதியது)

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: