தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அவல உரையாக உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெய லலிதா விமர்சித் துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் ஆளுநரால் வாசிக்கப்பட்ட உரை, தமிழ் நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்ற அவல உரையாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகை யாகாது. ஐந்து ஆண்டுகளாக, மின் உற்பத்தியை பெருக்கி, மின் பற்றாக்குறையை போக்காமல், ஆட்சி முடியும் தருவாயில், சில திட்டங்களை குறிப்பிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் உரையில் குறிப்பிட்டு இருப்பது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையைத்தான் காட்டுகிறது. டீசல் பற்றாக்குறை காரணமாகவும், உதிரி பாகங்கள் பற்றாக் குறை காரணமாகவும், தமிழ்நாடு முழுவதும் நூற்றுக் கணக் கான பேருந்துகள் ஓடாத சூழ்நிலையில், 2010-2011 ஆம் ஆண்டில் மேலும் 3,000 புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் செயல். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து ஆளுநர் உரையில் ஏதும் குறிப்பிடாததி லிருந்து, “கல்விக் கட்டண குறைப்பு” என்பது ஒரு ஏமாற்று வேலை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணியை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முன்னணியில் விளங்கிய ஜவுளித் தொழில் இன்று நூல் விலை உயர்வு காரணமாக முடங்கும் நிலைக்கு வந்துவிட்டது. இந்தத் தொழிலை பாதுகாப்பதற்கான திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் குறிப்பிடாதது மிகவும் வேதனை அளிக்கிறது. வீட்டு வசதித் திட்டம் உன்னதமான திட்டம் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. செங்கல், சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றின் விலை விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கின்ற நிலையில், 75 ஆயிரம் ரூபாய் மானியத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டுவது என்பது இயலாத காரியம். ஒரு லோடு மணல் விலை 18 ஆயிரம் ரூபாய் அளவுக்கு தற்போது விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் மணலின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இருக் கின்ற வீட்டை இடித்துவிட்டு செய்வதறியாது ஏழை, எளிய மக்கள் தவிக்கின்றனர். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிசை அகற்றும் வாரியமாக செயல் பட்டுக் கொண்டிருப்பதை மறந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் உள்ள சுமார் இரண்டரை லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற குடிசை மாற்று வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப் படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டு ள்ளது நகைப்புக் குரியதாக உள்ளது. ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இறக்க காரணமாக இருந்த கருணாநிதி, கத்தார் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத கருணா நிதி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் ஒன்றை அமைக்க இருப்பதாக ஆளுநர் உரையில் இடம் பெறச் செய்திருப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளும் சுகாதார மற்ற நிலையங்களாக காட்சி அளிக்கின்றன. இவற்றை சரி செய்யக்கூடிய திட்டம் ஆளுநர் உரையில் இடம் பெறாதது மிகுந்த வேதனையளிக்கும் செயல். நதி நீர் இணைப்புத் திட்டம், அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பங்கீடு ஆகியவை ஆளுநர் உரையில் இடம் பெறாததிலிருந்து, இவற்றை கருணா நிதி கைகழுவி விட்டுவிட்டார் என்பது தெளி வாகிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதாக ஆளுநர் உரையில் அறிவித்து இருப்பது வருத்தமளிக்கும் செயல் ஆகும். சட்டம் – ஒழுங்கை சீர்படுத்தவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும், விவசாய உற்பத்தியை பெருக்கவும், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சட்ட விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், விலை வாசியை குறைக்கவும் எந்தவித திட்டங்களும் இந்த ஆளுநர் உரையில் இடம் பெற வில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மென்றால், தொலை நோக்குப் பார்வையுடன் இருக்க வேண்டிய ஆளுநர் உரை, கொலை நோக்குப் பார்வையுடன் அமைந் திருக்கிறது. இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)