தலைமை தேர்தல் ஆணையத்தின் வைரவிழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டி டெல்லியில் தலைமை தேர்தல்
கமிஷனர் குரோஷி நிருபர்களிடம் கூறியதாவது:-

தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு முதன் முதலாக ஜனவரி 25-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு தனது 60-வது ஆண்டு வைர விழாவை தேர்தல் ஆணையம் கொண்டாடுகிறது. இதையொட்டி நாடு தழுவிய அளவில் விரிவான ஏற்பாடுகளை செய்யப்பட்டு உள்ளது.
அன்றைய தினத்தை வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. வாக்குச்சாவடி, யூனியன், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் 5 கட்டமாக வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. நாடுமுழுவதும் 8 லட்சத்து 32 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அவற்றிலும் வாக்காளர் தினம் நடைபெறும்.
இதையொட்டி வைரவிழா ஆண்டில் வாக்காளர் பட்டியலில் 18-வயது நிரம்பிய 8 லட்சம் இளைஞர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்பட இருப்பதாகவும் அவர்களுக்கு வரும் 25-ந் தேதி புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை வழங்கப்படும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்கள் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை. எனவே வரும் தேர்தலில் வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்கும் வகையில் நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டதைத் தொடர்ந்து நகர மக்களிடையே வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்து உள்ளது.
தேர்தல்கள் நேர்மையாவும், நியாயமாகவும் நடத்தப்படவேண்டும். தமிழகத்தில் தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை மூலம் அறிவிக்காமல், தேர்தல் சமயத்தில் நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கும்.இவ்வாறு குரோஷி கூறினார்.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)