Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போதைப்பழக்கம்-கோபத்தை நீக்கும் மரபணு சிகிச்சை: நீரிழிவு-இதய நோயையும் குணப்படுத்தலாம்

மரபணு மாற்று சிகிச்சை மூலம் நோய்களை மட்டுமல்ல மனிதர்களை வாட்டி வதைக்கும் போதை பழக்கம், கவலைப்படும் போக்கு, படபடப்பு, அதிக கோபம், பிடிவாதம், மன அழுத்தம் போன்றவ ற்றையும் அடியோடு நீக்க முடியும். இதுவரை மருத்துவத்தில் நோய்க் கான கிருமிகளை கண்டறிந்து அதை ஒழிப்பதற்கான மருந்து (ஆன்டிபயாடிக்) அளிக்க ப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது மனிதனின் அத்தனை உறுப்புகளையும் செயல்பட வைத்திடும் மரபணுவில் உள்ள கோளாறை கண்டுபிடித்து, நல்ல மரபணுவை செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மருத்துவ உலகம் வியக்கதக்க சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்கிறார் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறியதாவது:-
சமீபகாலமாக குழந்தை கருவில் இருக்கும் போதே அதில் குறைபாடு இருக்கிறதா? என்பதை கண்டறிய மரபணு பரிசோதனை கருவி உள்ளன. இதன் மூலம் குழந்தையின் உடலில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா? என்பதை கண்டறிய முடியும். இந்த மரபணு சோதனையில் குழந்தையின் கை, கால், ஊனமுற்றதாக உள்ளதா? உடல் வளர்ச்சி சீராக இருக்கிறதா? என்பதை கண்டறிய முடியும்.
சமீபகாலமாக மருத்துவ விஞ்ஞானிகள் மனிதனின் உடல்-மன பிரச்சினைகளுக்கு மரபணு சிகிச்சை மூலம் தீர்வு கண்டு வருகிறார்கள். மரபணு சிகிச்சை மூலம் மனிதனின் வாழ்நாளை அதிகரிக்க முடியுமா? என்பது பற்றியும், முதுமைக்கு காரணமான மரபணுவை கண்டறியும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்காலத்தில் இச்சிகிச்சை முறையானது மனிதர் களின் உடல்நலத்தில் மாபெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கும்.
மனிதனை தாக்கும் அனைத்து கொடிய நோய்களில் இருந்தும் விடுதலை பெற உதவும். நீரிழிவு, புற்றுநோய், தீராத மூட்டு வலி, முதுகுவலி, ஆண்மைக்குறைவு, பக்கவாதம், இதயநோய், கல்லீரல், சிறுநீரக கோளாறு, மலட்டுதன்மை, போன்றவற்றுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து ள்ளனர். அதிக கோபத்தை ஏற்படுத்தும் மரபணுவையும் போதைப் பழக்கத்தை உண்டாக்கும் மரபணுவையும் மாற்றினால் அதில் இருந்து விடுபடலாம்.
இந்த வகை சிகிச்சைகள் நம் நாட்டிற்கு வர இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். மருத்துவ உலகம் தற்போது ஜெட் வேகத்தில் முன்னேறி வருகிறது. குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகளுக்கும் மரபணு சிகிச்சை வரப் பிரசாதமாக அமையும் என்கிறார் டாக்டர் காமராஜ்.
சி.ஒய். பி.2 இ1 என்று அழைக்கப்படும் மரபணு மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உடலில் 10 முதல் 20 சதவீதம் வரை இந்த மரபணு காணப்படுகிறது. இந்த மரபணு கல்லீரலில் உருவாவதில்லை. மூளைப் பகுதியில் உருவாகிறது என்பது விசேஷம். மதுப்பழக்கத்தை உண்டாக்கும் சி.ஒய்.பி2 இ1 மரபணு உரிய மருந்துவ சிகிச்சை மூலம் கட்டுப் படுத்தலாம்.
மதுப் பழக்கத்தால் நம் நாட்டில் 40 சதவீதம் ஆண்கள், ஆண்மை குறைவு கோளாறால் அவதிப்படுகிறார்கள். இது தவிர பலர் வயிறு கோளாறு மற்றும் இதய நோயின் பிடியிலும் சிக்கி தவிக்கிறார்கள். போதையை நாடும் மரபணுவை மாற்றி அமைக்க நவீன சிகிச்சைகள் உள்ளன.  டாக்டர்கள் போதையை விரும்பும் மரபணுவை அகற்றி விட்டு நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தும் மரபணுவை பொருத்துவார்கள்.
மரபணு தொடர்பான ஆராய்ச்சிகள் மின்னல் வேகத்தில் நடப்பதால் நோய்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.ஒருவருடைய மதுப்பழக்கத்துக்கு மரபணுவும் காரணம் என்று சமீபத்தைய மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கபட்டுள்ளது. மது செரிமானம் ஆவதற்கு உதவும் நொதிப் பொருளில் அடங்கியுள்ளது மரபணு மர்மம்.
மரபணுக்கள் தான் உடலின் தோற்றத்தையும், இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் சக்தியாக உள்ளன. உடல் என்பது மரபணுக்களால் உருவாக்கப்படும் ஒரு நிரந்தரமற்ற மாயத் தோற்றம்.
இன்று நமது உடலில் வாழும் நகல் மரபணுக்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 20 தலைமுறைகளுக்கு முன்பு 10 லட்சத்து 48 ஆயிரத்து 576 முன்னோர்களின் உடலில் வாழ்ந்திருக்கின்றன. மதுவுக்கு அடிமையாகும் நிலை, மரபணுவால் தீர்மானிக்கப்படும் ஒரு மரபியல் நோயாகும். மதுவை சாப்பிட்ட பிறகு, அது செரிமானமாவதற்கு ஆல்கஹால் டிகைடிரோஜெனேஸ் எனும் நொதிப் பொருள் தேவை. இந்த நொதிப் பொருளை உருவாக்கும் மரபணுக்கள் இரண்டு வகைகள் உள்ளன. நமது நாட்டில் 60 சதவீதம் மனிதர்களுக்கு குடிப்பழக்கத்துக்கு அடிமையாக வைக்கும் மோசமான மரபணு வகை இருக்கிறது.
ஆனால் ஜப்பான், கொரியா, சீனா போன்ற மங்கோலிய இனத்தவர்கள் வாழும் நாடுகளில் மதுவுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நல்ல வகை மரபணு பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே இத்தகைய தீயமரபணு மதுவுக்கு அடிமையாவதை தடுத்து விடலாம்.
கோபத்தை ஏற்படுத்தும் மரபணு சிலருக்கு சில விஷயங்களில் கோபம் பொத்துக்கொண்டு வருவதற்கு ஒருவித மரபணு தான் காரணம் என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடிததுள்ளனர். சிலர் எதையாவது போட்டு உடைக்கிறார்கள். கண் முண் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். இதே விஷயத்தில் வேறு சிலர் நிதானத்தை இழக்காமல் செயல் படுகிறார்கள். இதுபற்றி பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் நடத்திய ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
சிலருக்கு மூக்கு மேல் கோபம் வருவதற்கு அவர்களது மூளை செல்களில் உள்ள மரபணுதான் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறார். மூளை செல்களில் செரோட்டோனின் என்ற ரசாயன திரவம் உள்ளது. இந்த திரவம் தான் மரபணுவின் செயல் பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இந்த மரபணு செயல் பாட்டின் மாறுதல்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
பெரியவர்களாக வளர்ந்ததும் இந்த மாற்றம் கோபத்தை கட்டுப்படுத்துவதையும் வெளிப்படுத்துவதையும் நிர்ணயிக்கிறது. பெரும்பாலும் ஆண்களிடம் தான் இந்த மரபணு மாற்றம் காணப் படுகிறது. ஏற்கனவே இதற்கு முன்நடத்தப்பட்ட ஆய்வுகளில் எம்.ஏ.ஓ.ஏ. என்ற மரபணுதான் இந்த கோபத்துக்கு காரணம் என்று தெரிவித்து இருந்தன.
மரபணு மாற்றம் மூலம் பறவைகள் போன்று குரல் எழுப்பும் எலியை, ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம் `மனிதனுக்கு பேச்சாற்றல் வந்த ரகசியம் குறித்து, அறிந்து கொள்ள முடியும்’. பரிணாம வளர்ச்சிக்கு `மியூட்டேசன்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பரிணாம வளர்ச்சியின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் வகையில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் களமிறங்கினார். எலிகளின் மரபணுக்களில் மாற்றம் செய்து ஆய்வு நடத்தினர். இதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளில் ஒன்று பறவைகள் போன்று குரல் எழுப்பியது தெரிந்தது. பரிணாம வளர்ச்சிக்கு திடீர் மாற்றங்களே முக்கிய காரணி என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட வரலாற்று ஆய்வு உண்மை.
இதை அடிப்படையாக கொண்டு தான் எலிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத் திட்டத்திற்கு `எலிகள் பரிணாம வளர்ச்சித் திட்டம்’ என்று பெயரிடப்பட்டது. எலிகளின் மரபணுக்களில் (டி.என்.ஏ) சில மாற்றங்களை செய்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.  அப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளில் ஒன்று, பறவைகள் போன்று குரல் எழுப்பியது. இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் மரபணு மாறற்றம் செய்யப்பட்ட எலி அதன் அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து பாடும் குணாதிசயத்தை மரபணு மூலம் கடத்தும் என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது. எனவே, அந்த எலியின் மரபணு தன்மையை அடிப்படையாக கொண்டு மேலும் 100 “பாடும்” எலிகளை உருவாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு ள்ளனர். இதன் மூலம் மனிதர்களுக்கு பேச்சாற்றல் வந்ததன் ரகசியத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக பறவைகளின் பாடும் குணாதிச யங்களையும் கூர்ந்து கவனித்து ஆய்வு நடக்கிறது என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் காமராஜ்.

(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: