துரை தயாநிதி அழகிரி, விவேக் ரத்னவேல் ஆகிய இருவரும்
இணைந்து `கிளவுட் நைன் மூவீஸ்’ சார்பில், `தூங்கா நகரம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில், விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கதாநாயகன் விமலின் நண்பர்களில் ஒருவராக நடிப்பதுடன், படத்தை டைரக்டு செய்கிறார், கவுரவ். இவர், டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி டைரக்டராக இருந்தவர்.
`தூங்கா நகரம்’ படத்தின் படப்பிடிப்பு, மதுரை பஸ்நிலையத்தில் நடந்தது. விமல்- அஞ்சலியுடன், சென்னையில் இருந்து வர வழைக்கப் பட்டிருந்த 500 துணை நடிகர்- நடிகைகள் சம்பந்தப் பட்ட காட்சியை டைரக்டர் கவுரவ் படமாக்கிக் கொண்டிருந்தார்.
படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்கு, கட்டுக்கடங்காத அளவில் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தார்கள். துணை நடிகர்- நடிகைகள் கூட்டத்துடன், ரசிகர்கள் கூட்டமும் கலந்ததால், நடிகர் யார்- ரசிகர் யார்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
சில இளைஞர்களை கொண்ட கூட்டம், அஞ்சலியை சூழ்ந்து கொண்டது. அவரிடம் கையெழுத்து வாங்குவது போல் முன்னேறினார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. சில ரசிகர்கள், அஞ்சலியின் கையைப்பிடித்து இழுத்து கலாட்டா செய்தார்கள். அதைப்பார்த்து வெகுண்ட டைரக்டர் கவுரவ், அந்த ர
சிகர்கள் மீது பாய்ந்தார். “பளார். .பளார்” என அவர்களின் கன்னத்தில் அறைந்து, வெளியேற்றினார்.
அடிவாங்கிய ரசிகர்கள், “நாங்க மதுரைக் காரர்கள். எங்கள் மீது கை வைக்கிறாயா?” என்று மிரட்டினார்கள். உடனே டைரக்டர் கவுரவ், நானும் மதுரைக்காரன்தான்’ என்று சொன்னார். அதற்குள் போலீசார் அங்கு விரைந்து வந்தார்கள். ரசிகர்கள் கூட்டத்தை கலைத்த பின்பு, தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)