Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜல்லிக்கட்டு : பிராணிகள் நலவாரியம் வேண்டுகோள்

பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த காளைகளை துன்புறுத்தக் கூடாது என்று இந்திய பிராணிகள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் கர்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ள உத்தரவுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

“1960-ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய பிராணிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, பிராணிகளுக்கு இழைக்கப் படும் சித்ரவதைகளை தடுக்க போராடி வருகிறோம். மாட்டு வண்டி பந்தயங்கள், குதிரைப் பந்தயங்கள், நாய் சண்டைகள், சேவல் சண்டைகள், காளை களை அடக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிராணிகள் கொடுமைப் படுத்தப் படுகின்றன. இதை தடுப்பதற்கு எங்கள் வாரியம் சட்ட பூர்வமான முறையில் போராடி வருகிறது.

நம்முடைய தனிப்பட்ட பேராசைக்காக விலங்குகளை துன்புறுத்தாமல் அவற்றின் மீது அன்பும் மதிப்பும் செலுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும். பொங்கல் திரு விழாவின் போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவது தொடர்பாக கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். வீர தீர விளையாட்டாக இது நடத்தப் பட்டாலும், உண்மை நிலைமை வேறு மாதிரியாக உள்ளது.

ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. அவை ஆவேசமாக இருப்பதற்காக அவற்றுக்கு மதுபானங்கள் வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு முன்பாக கண்களில் மிளகாய் பொடி தூவுதல் போன்ற சித்தரவதைகள் நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டின் போது ஒவ்வொரு ஆண்டும் பல பார்வையாளர்கள் உயிரிழப்பதுடன் பலர் படுகாயம் அடைகின்றனர். இந்த விளையாட்டு மாடுகளுக்கும் மனிதர்களுக்கு ஆபத்தானதாக இருந்தாலும் மாநில அரசு இதற்கு ஆதரவு அளிக்கிறது. எனவே ஜல்லிக் கட்டுக்கு தடை கோரி உச்சநீ திமன்றத்தை இந்திய பிராணிகள் நல வாரியம் அணுகியது.

அதன் பின்னர், இதற்கு ஆரம்பத் தடை விதிக்கப்பட்டு ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவதற்கு மாநில அரசு கட்டுப் பாடுகள் விதிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. 2009-ம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு கட்டுப்பாட்டு சட்டத்தின் மூலம் மாநில அரசு உருவாக்கிய வழி முறைகள் மிகவும் மென்மை யானவை. அந்த வழி முறைகளை எந்த நிகழ்ச்சியிலும் பின்பற்ற முடியவில்லை.

எனவே, 25.11.2010-ம் தேதி அன்று நடைபெற்ற கடைசி கட்ட விசாரணையின் போது ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை சித்தரவதையில் இருந்து தடுக்கவும், பார்வை யாளர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் மேலும் சில உத்தரவுகளைப் பின் பற்றுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.

அதன்படி, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பதிவு செய்ய வேணடும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விடப் பட்டது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை இந்திய பிராணிகள் நல வாரியப் பிரதிநிதிகள் பார்வை யிட்டு கண்காணிப்பதற்கு வசதி யாக அந்த நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாக அதுபற்றிய விவரங்களை இந்தியப் பிராணிகள் நல வாரியத்தின் சென்னை கிளைக்கு வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

ஜல்லிக்கட்டில் பாதிக்கப்படுவோருக்கும் அவர்களது குடும்பத் தினருக்கும் வழங்குவதற்காக சிறிய அளவிலான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகையையும் பெரிய அளவிலான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது,” என்றார் டாக்டர் கர்ப்.

வார இதழ் ஒன்றின் இணயத்தில் கண்டெடுத்த செய்தி

ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்

Leave a Reply